உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 4ல் ஆட்சியை பிடிப்போம்; 5ல் சிறையில் இருந்து ரிலீஸ்: கெஜ்ரிவால் ஆரூடம்

ஜூன் 4ல் ஆட்சியை பிடிப்போம்; 5ல் சிறையில் இருந்து ரிலீஸ்: கெஜ்ரிவால் ஆரூடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் ஜூன் 4ம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். ஜூன் 5ம் தேதி திஹார் சிறையில் இருந்து நான் வீட்டுக்கு திரும்புவேன் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியது. அவர் ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிசிடிவி கேமராக்கள்

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது: சிறையில் என்னை அவமானப்படுத்த முயற்சிகள் நடந்தது. சிறையில் எனது அறைக்குள் இரண்டு சிசிடிவி கேமராக்கள் இருந்தன. பிரதமர் மோடி என்னைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். மோடிக்கு என் மீது என்ன வெறுப்பு என்று எனக்குத் தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மக்களால் மதிக்கப்படுகிறார்கள். மக்கள் எங்களை நேசிக்கின்றனர்.

5ம் தேதி 'ரிலீஸ்'

எங்களின் மக்கள் பணியை கண்டு பா.ஜ., பயப்படுகிறது. ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருப்பேன். இண்டியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். ஜூன் 5ம் தேதி திஹார் சிறையில் இருந்து நான் வீட்டுக்கு திரும்புவேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

durairajdheenadayalan
மே 16, 2024 20:34

ஜூன் கு பிறகு நீதி cheethu விடும் போல,இவர் பேசுவது இப்படித்தான் irukirathu


Mohan
மே 16, 2024 15:17

இது நாள்வரை இந்தியாவிலேயே மிகவும் திமிரும், தலைகனமும் உள்ள தலைவர் மம்தா பேனர்ஜி மேடம் தான் என நினைத்திருந்தேன் எனது எண்ணம் தவறு அந்த சிறப்பு தகுதி எனக்கு மட்டும் தான் என்று உரக்க கூவி இருப்பவர் திரு குஜிலிவால் திகார் ரிட்டர்ன்டு ஆம் ஆத்மி தலைவராவார்லோக்கல் தாதா ரேஞ்சுக்கு பீத்திக் கொள்ளும் கெஜ்ரி சீக்கிரத்திஸ் காஸ் போன பலூன் ஆவார் இது உறுதி


sethu
மே 16, 2024 09:56

இவரது லட்சியம் நிறைவேற உச்ச நீதி மன்றம் ஆதரவளிக்கணும், நாட்டில் பலகட்ட அதிகார மையங்கள் இருப்பதும் நல்ல மக்களுக்கான அரசை செயல்பட விடாதுபோல இருக்கிறதே ?


DARMHAR/ D.M.Reddy
மே 16, 2024 00:43

பகல் கனவு பலிப்பதில்லை


Ramar P P
மே 15, 2024 12:32

அப்படின்னா நீதிமன்றம் உங்க பாக்கெட்டிலா


Kasimani Baskaran
மே 15, 2024 08:01

மணிக்கு ஆட்சியமைத்தவுடன் க்கு மண்ணள்ளுவோம் என்று சொல்லிக்கொண்டேதான் தீம்கா ஜெயித்தது மண்ணள்ளினார்கள் அமலாக்கத்துறை வந்தது அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என்பதை புரிந்து கொண்ட நீதிமன்றம் இதை எப்படி கையாள்வது என்று திகைத்து நிற்கிறது


vadivelu
மே 15, 2024 06:22

என்னவோ யோக்கியன் போலவும், ஆட்சிக்கு வந்ததும் நீதி மந்ரங்கள் இவன் கட்டுப்பாட்டுக்குள் வந்து இடும் என்பது போலவும் பேசுறதற்கு வெட்கமாக இல்லை


Kavi
மே 15, 2024 06:51

ட்ரு


s. viswanathan
மே 14, 2024 20:28

இது ஆட்சியில் அமர்ந்தால் நீதி மன்றம் ஒன்றும் இல்லை நான் வெளியே வந்து விடுவேன் கேட்க மிகவும் கஷ்டமாக உள்ளது


venkatakrishna
மே 14, 2024 17:52

கெஜ்ரிவால் எப்போது ஜோஸ்யர் ஆனார் திகாருக்கே இந்த தகவல்கள்


GANESUN
மே 14, 2024 16:00

பிடிக்கலேன்னா


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை