உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: நேரில் மருத்துவமனை சென்ற மம்தா

மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: நேரில் மருத்துவமனை சென்ற மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முர்ஷிதாபாத்தில் வக்ப் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை அவர் அண்மையில் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=phdwbn41&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில், திடீரென ஆனந்த போஸூக்கு நெஞ்சுவலி ஏற்பட, உடனடியாக கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.உரிய பரிசோதனைகளுக்கு பின்னர், அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கவர்னரின் உடல்நிலை பற்றிய தகவலறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.அங்கு அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், கவர்னர் உடல்நலமில்லாமல் இருப்பதை அறிந்து மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். இதுதொடர்பான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார். கவர்னர் ஆனந்த போஸ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை ராஜ்பவன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

thehindu
ஏப் 21, 2025 22:08

இந்துமதவாதிகள் தீவிரவாதிகளின் உறைவிடமாக கருதும் துபாய் சவுதி கனடா உள்ளிட்ட பலநாடுகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் மோடி திரும்பும்போது , உளநாட்டில் இப்படி ஒரு அவலம்


thehindu
ஏப் 21, 2025 22:05

பாஜ அல்லாத முதல்வரின் பெருந்தன்மைதான் இது . அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த தலைவர்


thehindu
ஏப் 21, 2025 22:03

தன் உயிரைக்கொடுத்து வேலை தனக்காக பதவிக்காலம் முழுவதும் அர்ப்பணித்துக்கொண்ட ஒருவரை மோடியே பார்க்காதபோது எதிர்க்கட்சி முதலவர் சென்று பார்த்தது அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்காமல் மீடியாக்களின் காதில் எட்டாமல் இருந்தது எப்படி ?. NDA வில் சேரப்போகிறார் என்ற ஒரு புரளி கூட இல்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 21:17

கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுடன் பேசினார் .... அந்த அதிர்ச்சி .....


Ramesh Sargam
ஏப் 21, 2025 19:37

நெஞ்சுவலிக்கு காரணமே மமதாதான். மாமாதாவை மருத்துவமனையில் பார்த்தால் கவர்னருக்கு நெஞ்சுவலி அதிகம்தான் ஆகும்.


Rasheel
ஏப் 21, 2025 19:18

லால் பகதூர் சாஸ்திரிக்கே பாலை கொடுத்து வெளிநாட்டில் நெஞ்சு வலிய உண்டாக்கி டிக்கெட் கிழித்த நாடு. பேகம் நாட்டில் நடக்க முடியாதா?


Yasararafath
ஏப் 21, 2025 18:53

இது இயற்கை


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 18:20

அவசரப்பட்டுட்டார்


sankaranarayanan
ஏப் 21, 2025 17:06

மமதாவின் நென்ஜுக்குள்ளெ இன்னாரென்று சொன்னால் புரியுமா?


SUBBU,MADURAI
ஏப் 21, 2025 17:00

மூஞ்சியில் சோகத்தோடும் மனசுக்குள் மகிழ்ச்சியோடும் மம்தா கவர்னரை பார்க்க போயிருப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை