உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேசியதில் என்ன தப்பு; சீக்கியர்கள் சொல்லட்டும் என்கிறார் ராகுல்!

பேசியதில் என்ன தப்பு; சீக்கியர்கள் சொல்லட்டும் என்கிறார் ராகுல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அமெரிக்காவில் சீக்கியர் குறித்து நான் பேசியதில் தவறு உள்ளதா என இந்தியா மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சீக்கியர்கள் கூற வேண்டும், '' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் அமெரிக்கா சென்றிருந்தார். வாஷிங்டன்னில் நடந்தை கலந்துரையாடலில் அவர் பேசுகையில், '' இந்தியாவில் நடக்கும் மோதல் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா அல்லது குருத்வாராவிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனரா என்பது பற்றியதே'' என்றார். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராகுல், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் நான் கூறியது குறித்து பொய் பரப்ப பா.ஜ., துவங்கிவிட்டது. நான் சொன்னதில் ஏதேனும் தவறு உள்ளதா என இந்தியா மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சீக்கிய சகோதரர் மற்றும் சகோதரிகளிடம் கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியரும், இங்கே தங்களது மதத்தை அச்சமின்றி பின்பற்ற முடிகிறதா?வழக்கம் போல் பா.ஜ., பொய் பரப்ப துவங்கிவிட்டது. அவர்கள் உண்மையின் பக்கம் நிற்க முடியாததால், எனது குரலை அமைதியாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், இந்தியாவை வரையறுக்கும் மாண்புகள், வேற்றுமையில் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் அன்பு குறித்து எப்போதும் பேசுவேன். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

S.V.Srinivasan
செப் 23, 2024 11:30

நீ பேசியது தப்புன்னுதானே சீக்கியர்கள் டெல்லியில் உன் வீட்டு முன் மரியல் செய்தார்கள். இன்னும் என்ன சந்தேகம் உனக்கு பப்பு. உன்ன டெல்லிக்குள்ள விட்டார்களே, அதுவே பெரிய விஷயம்.


sankar
செப் 22, 2024 19:18

தவறான தகவல்கள் தருவதில் கில்லாடி


p.s.mahadevan
செப் 22, 2024 12:46

ஜாதி மற்றும் மத கலவரங்களை தூண்டி நாட்டை துண்டாக்காமல் இவர் ஓயமாட்டார் போலும்.


ராசு
செப் 22, 2024 08:35

இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது!!!


ManiK
செப் 22, 2024 07:13

அமெரிக்கா போயிட்டு பாரதம் வராமல் எங்க போய் மர்மவேலை செய்கிறார் இந்த நக்ஸல் நரி. Central Government தைரியம் காட்டாமல் இனிமேலும் இருக்கக்கூடாது.


நாதன்
செப் 22, 2024 05:45

மூளை மழுங்கிய இந்த பப்பு உளறிக் கொட்டுவதை நிறுத்த வேண்டும்


xyzabc
செப் 22, 2024 01:23

Rahul Bhaiya, please pay a visit to Bangla and Pak. Hopefully you will keep your mouth shut afterwards. Your bro MKS is smarter than you. He can provide a suggestion.


Dhanraj
செப் 21, 2024 23:34

வரும் தேர்தலில் மதவாதத்திற்கு எதிராக மக்கள் செருப்படி கொடுத்த பிறகுதான் சங்கிகள் அடங்குவார்கள். திருவள்ளுவர் பிறந்த அறிவு பூமியில் சங்கிகள் இருப்பது வெட்கக்கேடு. அரசியல்ல எதுக்கு மதத்தை கலக்குறீங்க. மத அரசியல் ஆபத்து. தேச ஒற்றுமைக்கு சகோதரத்துவத்துக்கு எதிரானது நண்பர்களே...


sankar
செப் 22, 2024 16:17

உன்னைப்போல மங்கில்தான் இந்த நாட்டின் சாபக்கேடு


Kannan Chandran
செப் 21, 2024 23:29

நீ எவ்வளவு பெரிய மூடன்னு உனக்கு புரியுதா?


krishna
செப் 22, 2024 11:51

NEENGA VERA DHANRAJ AVARGALUKKU ADHELLAM THERINDHAAL EEN IPPADI KEVALAMA KARUTHU PODURAAR.


Kumar
செப் 21, 2024 23:00

தமிழ்நாட்டில் ப்ராஹ்மணர்கள் நான் "ப்ராஹ்மணன்" என்று கூற முடியுமா என்று கேள முதலில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை