உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோயிலில் இருப்பது என்ன என்ன?: முழு தகவல்

அயோத்தி ராமர் கோயிலில் இருப்பது என்ன என்ன?: முழு தகவல்

அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயிலில் உள்ள வசதிகள் குறித்து அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.

392 தூண்கள்

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அறக்கட்டளை கூறியுள்ளதாவது: நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளை கொண்டதாக ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. 380 அடி நீளத்திலும் (கிழக்கு மேற்கு திசையில்) 250 அடி அகலத்திலும், 161 அடி உயரத்திலும் கோயில் உள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. 392 தூண்கள், 44 கதவுகள் உள்ளன. ஒவ்வொரு தூண்கள் மற்றும் சுவர்களில், தெய்வங்களின் சிலை இருக்கும். பிரதான கருவறையில் ராமர் சிலை வைக்கப்படும். முதல் தலத்தில் ஸ்ரீராம் தர்பார் அமைக்கப்பட்டு உள்ளது.

5 மண்டபங்கள்

கோயிலில், நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என 5 மண்டபங்கள் உள்ளன.

லிப்ட் வசதி

கிழக்கு திசையில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் நுழைவார்கள். 32 படிக்கட்டுகள் இருக்கும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வசதிக்காக சாய்வுதளம் மற்றும் லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கோயிலை சுற்றி, 732 மீட்டர் நீளத்திலும் 14 அடி உயரத்திலும் சுற்றுச்சுவர் உள்ளது. கோயில் அருகே, வரலாற்று சிறப்பு மிக்க, பழங்காலத்து கிணறு ஒன்று உள்ளது.

மருத்துவ வசதி

பக்தர்கள் வசதிக்காக 25 ஆயிரம் பேர் தங்கும் வகையில், பக்தர்கள் வசதி மையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு மருத்துவ மற்றும் லாக்கர் வசதி இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

kijan
ஜன 05, 2024 03:41

பகவான் ஸ்ரீ.ராமச்சந்திர மூர்த்தி ...சூரிய குலத்தில் ...இஷ்வாகு குலத்தில் தோன்றி இருந்தாலும் .... மீனவ சமுதாயத்தை சேர்ந்த குகனை ...அரவணைத்து ...பண்புள்ள குகனுடன் ஐவரானோம் என்கிறார் .... அதனால் அவர் மீனவ சமுதாயம் .... எனவே கடர்கரையோரம் வசிக்கும் மீனவ நண்பர்கள் ...மீன்பிடி தடைக்காலங்களில் அலை கடலென இராமர் கோவிலுக்கு திரண்டு வரவேண்டும் ....


Ramesh Sargam
ஜன 05, 2024 00:12

அயோத்தி ராமர் கோயிளுக்கு வெளியேயும், அதாவது கோவில் வெளிப்புறங்களில், ஒட்டுமொத்த அயோத்தி நகரிலும் மக்களுக்கான வசதிகள் செய்து தரப்படவேண்டும். கோவில் அருகில் இப்பொழுதிலிருந்தே எந்தவித ஒரு ஆக்கிரமிப்பும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கோவில், கோவில் சுற்றுப்புறங்கள், அயோத்தி நகரம் முழுவதும் மிக மிக சுத்தமாக பராமரிக்கப்படவேண்டும். ஜெய் ஸ்ரீ ராம்.


g.s,rajan
ஜன 04, 2024 21:01

Srirangam is Yielding More Revenue but Betrayed in Basic Amenities and Infra Structure.....


Raa
ஜன 04, 2024 23:11

Ask that useless department to get out of the temple and handover to real trustees.


hari
ஜன 05, 2024 13:13

Rajan, you need to fight with local DMK government.


venugopal s
ஜன 04, 2024 19:42

உங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் கோயில், குளங்கள் கட்டிக் கொள்ளுங்கள் எங்களுக்கு கவலையில்லை.ஆனால் மத்திய அரசின் நிதியுதவி எல்லா மாநிலங்களிலும் உள்ள எல்லா ஊர்களுக்கும் ஓரளவுக்கு நியாயமாக சமமாக கொடுக்க வேண்டும். அயோத்திக்கும் ,காசிக்கும் மட்டுமே எல்லா வசதிகளும் ஏன் செய்து கொடுக்க வேண்டும்? மதுரைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் ஏன் இதேபோல் செய்யக்கூடாது ?


Anil
ஜன 04, 2024 19:56

ஆரம்பிச்சிட்டாயா வேணு


sridharan RAMDAS
ஜன 04, 2024 21:23

முதலில் பிஜேபி க்கு வோட்டு போடுங்க. பிறகு அவர்கள் செய்வார்கள்.


Raa
ஜன 04, 2024 23:14

வேணுவுக்கு, அயோத்தி கோயில் பணம் ஒரு டிரஸ்ட் நிர்வகிப்பது, இதில் ஒரு துளியும் மக்கள் வரிப்பணம் இல்லை என்பது தெரியாமல் அரசியல்வாதி போல பேசுவது கைவந்த கலை அல்லது எதையும் உருப்படியாக படிப்பதில்லை.


hari
ஜன 05, 2024 13:14

நீ உன் கட்டுமர ஆட்சியிடம் போய் கேளு.....1000 ரூபா வாங்கிட்டு இங்கே மொக்க கமெண்ட் போடாதே


Tamilselvan,kangeyam638701
ஜன 05, 2024 13:26

முதலில் முரசொலியில் மூலப் பத்திரத்தை காட்ட சொல்லு மூதேவி கேள்வி கேட்க வந்துட்டான் மெனக்கெட்டு...


N SASIKUMAR YADHAV
ஜன 05, 2024 16:17

தமிழகத்தில் வசூலித்த வரியைவிட அதிகமாக கொடுத்திருக்கிறாராம் வேநூ . மத்திய நிதியமைச்சர் சென்னையில் சொல்லியிருக்கிறார் . மூலபத்திரமில்லா முரசொலியை படிப்பதை விட்டுட்டு தினமலர் படிக்க பழகு


ராமகிருஷ்ணன்
ஜன 06, 2024 08:15

இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் வட இந்திய பக்தர்கள் கட்டுமானம் செய்யும் போது கமிஷன் கேட்டு திராவிட கும்பல் தடுத்தனர்.


aaruthirumalai
ஜன 04, 2024 18:29

இல்லாத ஏழை எளிய மக்களுக்காக இலவச வழிபாட்டு சேவைகள் உணவு தங்கும் வசதிகள் திருப்பதிபோல் செய்து தரவேண்டும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ