உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு பேரிடருக்கு காரணம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

வயநாடு பேரிடருக்கு காரணம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவுக்கு பலவீனமான சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 10 சதவீதத்திற்கு அதிகமான மழைப்பொழிவே காரணம் என சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த ஜூலை 30ல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 231க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த பேரிடர் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதற்கான காரணம் குறித்து இந்தியா, ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 24 விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.அதில், பலவீனமான சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 10 சதவீதத்திற்கும் அதிகமான மழைப்பொழிவு காரணமாக பேரழிவு ஏற்பட்டது. சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து இருந்தால், மழை 4 சதவீதம் அதிகரித்து இருக்கும்.ஒரு நாளில் அதிக மழை பொழிவு பதிவானது என்பது, உலகம் வெப்பமயமாதல் என்ற கூற்றுக்கு சான்றாக அமைகிறது. வெப்பமான வளிமண்டலம், ஈரப்பதத்தை கொண்டு மழைப்பொழிவை அதிகரிக்கிறது.வயநாட்டில் நிலப்பரப்பு, நிலப்பரப்பு மாற்றங்கள் மற்றும் நிலச்சரிவுக்கான காரணம் ஆகியவை இடையே உள்ள தொடர்பு தற்போதுள்ள ஆய்வுகள் மற்றும் காரணிகள்( குவாரிகள் அமைத்தல், வனப்பகுதி அழிப்பு) இருந்து முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து உள்ளனர்.அதேநேரத்தில் காடுகள் அழிப்பு, குவாரி அமைத்தல் மற்றும் அதிக மழைப்பொழிவே இந்த பேரிடருக்கு காரணம் என வேறு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sankaran
ஆக 14, 2024 22:09

இது கடவுள் குடுத்த தண்டனை...


Kasimani Baskaran
ஆக 14, 2024 20:54

நீர் வழிந்தோடும் இடம் ஆபத்தானது என்ற பொது அறிவு போதும் - விஞ்ஞானமெல்லாம் தேவையில்லை. கடினமான பாறை என்றால் கட்டிடம் கட்டலாம் - இல்லை என்றால் என்றாவது ஒருநாள் காட்டாற்று வெள்ளம் அடித்துக் கொண்டுதான் போகும். கிடைத்ததெல்லாம் ஆக்கிரமித்தால் இதுதான் நடக்கும்.


Ramesh Sargam
ஆக 14, 2024 20:36

ஒரேயொரு காரணம் என்னவென்றால் மனிதன் இயற்கையை பல காலமாக அழித்தான். இயற்கை பழிவாங்கிவிட்டது. இனியாவது மனிதன் திருந்துவானா என்றால் சந்தேகமே...


M Ramachandran
ஆக 14, 2024 20:11

கம்யூனிஸ்டுக்கள் ஆட்சி காலத்தில் காடுகள் அளிக்க பட்டு கட்சி காரர்களுக்கு இடம் ஒதுக்கி வாழ்விடமாக ஆக்கி விட்டார்கள். தரசமயம் கேரள வன பகுதிகள் 30% காடுகள் அளிக்கப்பட்டுள்ளுது . முழுக்க முழுக்க அரசியலே காரணம். இங்கிலீலாந்தில் கூட இவ்வளவு சர்ச்சுக்கள் ஒரு ஸ்கொயர் கிலோ மிட்டருக்கு இல்லை.


TSRSethu
ஆக 14, 2024 19:44

ஒரே காரணம் மனிதனின் பேராசை


TSRSethu
ஆக 14, 2024 19:43

வனவிலங்குகளுக்கு சொந்தமான மேற்கு தொடர்ச்சி மலையை சுயநலத்திற்காக ஆக்கிரமித்து அதனை சீரழித்துக் கொண்டேயிருக்கும் மனிதர்களின் பேராசை. மனிதர்களே உங்களுக்கு உண்மையில் மனசாட்சி இருக்குமானால் மேற்கு தொடர்ச்சியை காடுகளை தேயிலை தோட்டங்களை விட்டுவிட்டு சமவெளிப்பகுதிக்கு நகருங்கள். இப்போது நடந்திருப்பது ஒரு இயற்கையின் ஒரு சிறிய எச்சரிக்கை மட்டுமே. காடும் மலையும் நமக்கு தண்ணீரை தந்தால் போதும். காடும் மலையும் வன விலங்குக்கே உரிமையுள்ள இடம். புரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே


Srinivasan Krishnamoorthi
ஆக 14, 2024 17:23

சர்வ தேச விஞ்ஞானிகள் என்பது பொய். விலைக்கு வாங்கப்பட்ட செய்தி இது. 100 வருடம் முன்னர் இதே போல வயத்தில் நிலச்சரிவு வந்தது. அப்போது ஜனத்தொகை 15% நிலையில் இருந்தது பருவ பொழிவு மேற்கு தொடர்ச்சி முழுதும் உள்ளதே ஜப்பான் போல முன்னெச்சரிக்கை கேரளா தமிழ்நாடு செய்வதில்லை ஒதிஷா செய்கிறது


ganapathy
ஆக 14, 2024 17:06

ஆமாமா...எவ்வளவு அதிர்ச்சி....இதை தெரியாத நாங்க பாட்டுக்கு மெரினா முழுக்காலும் சமாதி....அதுவும் திருட்டுத்திராவிட சமாதிகள் வேற கட்டுபுபுட்டோம்....நாளைக்கு சுனாமி வந்தா பேசாம பழிய தூக்கி மோதி பாஜக இந்துக்கள் சங்கரமடம் ஆர்எஸ்எஸ் மேல போட்டு தப்பிக்க முடியாதான்ன?


Swaminathan L
ஆக 14, 2024 16:59

உலக வெப்பமயமாதல் காரணமாக வயநாடுச் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பத்து சதவிகிதத்துக்கும் அதிகமான மழைப்பொழிவு தான் காரணம் என்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டு முடித்து விடலாம்.


நிக்கோல்தாம்சன்
ஆக 14, 2024 16:34

Greedy Gulf money என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார் , ரிசார்ட் , ஹோம்ஸ்டே என்று விளையாடிய மல்லுபாண்டிகள் இனி வேறு கதைகளை புனைவார்களே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை