உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவர் எங்க மாணவர்: இலங்கை பிரதமரை கொண்டாடும் டில்லி ஹிந்து கல்லூரி

அவர் எங்க மாணவர்: இலங்கை பிரதமரை கொண்டாடும் டில்லி ஹிந்து கல்லூரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' இலங்கை பிரதமராக பதவியேற்று கொண்ட ஹரிணி அமரசூரிய, எங்களது கல்லூரியில் படித்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்,'' என டில்லியில் உள்ள ஹிந்து கல்லூரி பெருமிதம் தெரிவித்து உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். இதன் மூலம் இலங்கையின் 3வது பெண் பிரதமர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.பிரபல கல்வியாளரான ஹரிணி அமரசூரிய, டில்லி பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து கல்லூரியில் 1991 முதல் 1994 வரை பிஏ சோஷியாலஜி முடித்தவர் ஆவார். பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்து தெரிவித்து ஹிந்து கல்லூரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கையின் 16வது பிரதமராகவும், 3வது பெண் பிரதமராகவும் பதவியேற்று கொண்டதில் பெருமை கொள்கிறோம். ஹிந்து கல்லூரியின் வகுப்பறைகளில் இருந்து தனது இலங்கை பிரதமர் அலுவலகம் வரை டாக்டர் ஹரிணி மேற்கொண்ட பயணம் பெருமைக்குரிய விஷயம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.கல்லூரி முதல்வர் அஞ்சு ஸ்ரீவஸ்னைா கூறுகையில், ஹரிணியின் வெற்றி மற்றும் வளர்ச்சியை குறித்து நாங்கள் நம்ப முடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறோம். அவர் கல்லூரியில் படித்த காலம் தான், தலைவராக மாறுவதற்கான அவரது பாதையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சண்முகம்
செப் 26, 2024 23:59

இலங்கை பெரமுனா இன வெறியாளரை டெல்லி இந்து கல்லூரி உருவாக்கியுள்ளது.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 26, 2024 18:07

கமலா அமெரிக்க துணை ஜனாதிபதி ஆனப்ப எங்க புலிகேசி மன்னர் தமிழர் ன்னு சொல்லி பெருமைப் பட்டாரு ..... இதுவும் அதேமாதிரி காமெடிதான் ....


Jay Al
செப் 26, 2024 20:37

உன யாழ்பாண தமிழன் ஒற்றுமை இல்லாத புத்திய கொண்டு வராத ,, உன் அகதி முகாமில் வைத்து கோழ்


K.n. Dhasarathan
செப் 26, 2024 17:11

அதெல்லாம் சரிதான், தமிழக மீனவர்களுக்கு என்ன செய்ய போகிறார் ? இலங்கை கடல் படையும், அங்குள்ள மீனவர்களும் கொலைகாரர்களைப்போல, கொள்ளைக்காரர்களைப்போல நடந்து கொள்கிறார்கள். இங்குள்ள பிரதமரும் கண்டு கொள்வதில்லை, அவர் எதையுமே கண்டு கொள்வதில்லை என்பது வேறு விஷயம், மீனவர்கள் உயிர்களை, உடைமைகளை இழந்து, சிலர் இலங்கை சிறைகளில் மிக பரிதாபகர நிலைமையில் வாழ்கிறார்கள், இங்குள்ள ஒவ்வொரு தமிழரும் கொதித்துப்போயி உள்ளார்கள். நிலைமையை உணர்ந்து புதிய பிரதமர் செயல்படுவாரா ? அல்லது இன்னொரு ராஜபக்சே போல ஆவாரா, காலம்தான் நல்ல பதில் சொல்லானும் .


Jagan (Proud Sangi)
செப் 26, 2024 18:32

மீனவர் போர்வையில் போதை மருந்து மற்றும் கள்ளக்கடத்தல் கார்கள் நிறுத்தட்டும். GPS உள்ள இந்த காலத்தில் எல்லை தெரியாதாம். நிஜ மீனவர்கள் என்றால் ஏன் இந்திய ரோந்து படை கூட வருகிறேன் என்று சொன்னால் வேண்டாம் என்கிறார்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை