உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த டில்லி முதல்வர் யார்? போட்டியில் இரு பெண்கள்!

அடுத்த டில்லி முதல்வர் யார்? போட்டியில் இரு பெண்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அக்னி பரீட்சையில் இறங்கி, மக்களின் தீர்ப்பை கேட்கப் போவதாகவும், சட்டசபைக்கு தேர்தலை முன்னதாக நடத்தும்படி கோர உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

2 நாட்களில் புதிய முதல்வர்

'அடுத்த இரண்டு நாட்களுக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்தி, ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். நான் நேர்மையானவன் என்பதற்கு மக்கள் ஒப்புதல் அளித்தால் தான், தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவியில் நானும், துணை முதல்வர் பதவியில் மணீஷ் சிசோடியாவும் அமர்வோம்' என கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இரு பெண்கள்

இதையடுத்து, அடுத்த முதல்வராக ஆம்ஆத்மியின் 2வது பெரிய தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா பெயர் அடிப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஜினாமா அறிவிப்பை வெளியிட்ட கெஜ்ரிவால் வழக்குகளை எதிர்கொள்பவர் பதவியை வகிக்க மாட்டார் என தெரிவித்தார். இந்த சூழலில், அடுத்த முதல்வர் போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யார் அடுத்த டில்லி முதல்வர்?

முதல்வர் பதவிக்கான சாத்தியக்கூறுகளில், கல்வி, நிதி, பொதுப்பணித்துறை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவரம் தெரிந்த அரசியல் விமர்சகர்கள். அதேநேரத்தில், முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பதவிக்கு மாற்றுவதற்கான சாத்தியமான வேட்பாளராக இருக்கலாம் என பேச்சு அடிப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 16, 2024 14:20

மோடி ஒதுங்குவார் ..... அமித் ஷா பிரதமர் ஆவார் ன்னு சொன்ன வாயி கெஜ்ரிவால் வாயி ....


theruvasagan
செப் 16, 2024 14:14

தாரமா தாய்க்குலமா யாருக்கு வாய்ப்பு. திரைக்குப் பின்னால் நடக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டு. திடுககிடும் மர்மங்கள் திகில் திருப்பங்கள். தயாரிப்பு கதை வசனம் இயக்கம் திகார் திலகம் சரக்கு கமிஷன் மண்டி கோல்மால் குஜிலிவால். வெள்ளித்திரையில் விரைவில் வெளியீடு


Rpalnivelu
செப் 16, 2024 13:42

மனைவி துணைவி இணைவி என்று பலர் இருந்தாலும் இருக்கும் வரை ஒருத்தரையும் அண்ட விடாதே. அப்போதான் சமாதி இடம் கெடைக்கும்.


Sudha
செப் 16, 2024 11:18

மனைவி க்கு கொடுக்காதீர்கள் பெயர் கெட்டு விடும்


Sudha
செப் 16, 2024 11:17

ஆயிரம் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி இருந்தாலும், தமிழ் நாடு இது போல் கேவலமாக ராஜினாமா செய்யாது


Ramesh
செப் 16, 2024 11:01

மனைவியா ? துணைவியா ? என்கிற போட்டி அங்கும் இருக்கிறது போல


HoneyBee
செப் 16, 2024 12:37

துணைவி ஜெயிப்பாள்


Raja
செப் 16, 2024 10:46

Arvind Kejriwal ditched Anna Hazare and he has become CM Delhi. He was caught in multiple scams and events against India 1 Farmers agitation he has been supported by way of mobilizing farmers from Punjab 2 He has instigated CAA agitators by required logistic support.3 He has d an issue with Lt Governor despite Delhis CM limited powers as per the constitution My view is Delhi should be a sterile zone without any election, under the direct control of the Home Ministry since Delho involves some crucial decisions and security concern -since we are in a changed world -New measures are required to tackle the situation . Scam: He was caught in a Liquor scam, the proof might have been given by CBI and ED to the top court. He knows very well, that he does not have a way to escape. He is now making sympathy among people to come back in elections -Chances are thin. Congress is the party that will be much Happier on this episode, now maintaining stock silence since has eaten congress votes in Delhi and Punjab .His departure is good for certain types of politicians, since it may stop them from entering politics -My view on seeing Kejariwal since Anna Hazare period


Kumar Kumzi
செப் 16, 2024 10:16

எப்போதுமே ....க்கு தான் பதவி குடுப்பாரு குஜிரிவால்


Rajamani K
செப் 16, 2024 09:48

அந்தப் பெண்மணிகளைப் பார்த்தால், சசி தரூர் காங்கிரசிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் சேர்ந்து, அவர்கள் இருவரையும் ஆதரிப்பாரோ என்று தோன்றுகிறது


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 09:58

அவனுக்கு வேணும் ன்னா ஆம் ஆத்மீயில் சேர்ந்தே ஆகணும் ன்னு கட்டாயமில்லை ....


N.Purushothaman
செப் 16, 2024 09:47

சாராயத் திருடன் மனைவி கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார் ? அவரை முதல்வராக்க என்ன முகாந்திரம் உள்ளது ?


krishnamurthy
செப் 16, 2024 11:08

இவனே தொடர்ந்து புறவாசல் வழியாக ஆட்சி செய்வான். அதனால்தான் அரசியல் தெரியாதவள் முன் நிறுத்த முனைகிறான். ஆம் ஆத்மி இதை அனுமதிக்க கூடாது.


முக்கிய வீடியோ