உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த பிரதமர் யார் ? பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லை

அடுத்த பிரதமர் யார் ? பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லை

லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், நேற்று இரவு வரை கூட, அந்த கூட்டணி சார்பாக ஆட்சி அமைப்பது பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை. பிரதமர் மோடி, 'தே.ஜ., கூட்டணிக்கு மூன்றாவது முறை வாய்ப்பளித்ததற்கு நன்றி' என்று மட்டும், நேற்று மாலை, சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

நன்றி தெரிவித்தனர்

பின், இரவு 9:00 மணியளவில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, பா.ஜ., கட்சி தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங், கட்சி தொண்டர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இங்கும் ஆட்சி அமைப்பது பற்றி எதுவும் பேசப்படவில்லை. மாறாக, கடந்த 10 ஆண்டு சாதனைகளை மட்டும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். தே.ஜ., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்கள் வென்றுள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் தலைவர்கள், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க இன்னும் தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளதால், அரசியல் வட்டாரத்தில் சந்தேக கேள்விகள் எழுந்துள்ளன. இரு கட்சிகளின் செய்தி தொடர்பாளர்கள் மட்டும், 'நாங்கள் தே.ஜ., கூட்டணியில் தொடர்வோம்' என்று பேட்டியளித்துள்ளனர். தலைவர்கள் வாய் திறக்கவில்லை. இந்த இரு கட்சிகளுடனும், இண்டியா கூட்டணி தரப்பிலும் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி தரப்படும் என்றும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்றும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கு ஆசை வார்த்தை சொல்லி இண்டியா கூட்டணி இழுக்க முயற்சிப்பதாக டில்லியில் செய்தி பரவுகிறது. இண்டியா கூட்டணியினர் இன்று டில்லியில் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு செல்கிறார்.

மீண்டும் மோடி கோஷம்

மற்ற கட்சிகளின் அரசியல் நகர்வுகள் இப்படி இருக்க, பா.ஜ., கிட்டத்தட்ட நிசப்தமாக இருக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையோடு வென்றபோது, 'மீண்டும் மோடி' என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. ஆனால், இந்த முறை அவ்வாறு எந்த பேச்சும் பா.ஜ.,வில் இல்லை. பா.ஜ.,வினர் மத்தியிலேயே இது பற்றி குழப்பம் நிலவி வருகிறது. காரணம், கூட்டணி கட்சிகளின் தயவில் பிரதமராக தொடர மோடி விரும்ப மாட்டார் என்றும், கூட்டணி ஆட்சியை வழி நடத்திச் செல்லும் அளவுக்கு பிரதமர் மோடிக்கு பொறுமை கிடையாது என்றும், அவருடைய தீவிர ஆதரவாளர்களே கூறுகின்றனர். கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மோடிக்கு பதிலாக வேறு ஒரு நபர் தான் பிரதமராவார் என்ற பேச்சு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே இருந்தது. தற்போது பா.ஜ.,வுக்கு 272 சீட் கிடைத்திருந்தால், அந்த எம்.பி.,க்கள் கூடி, பார்லிமென்டரி பா.ஜ., கட்சியின் தலைவராக மோடியை தேர்வு செய்வர். அவர் அந்த கூட்டத்தின் தீர்மான நகலுடன் ஜனாதிபதியை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார். பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தேர்தலில் அதிகமான இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சி என்ற வகையிலும் இந்த நடைமுறையை பின்பற்றலாம்.கூட்டணி அரசு அமைப்பது என்ற முடிவுக்கு வந்தால், அக்கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டு கொடுத்த ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதியை சந்தித்து உரிமை கேட்கலாம். அந்த கடிதங்கள் திருப்திகரமாக இருந்தால், ஆட்சி அமைத்துவிட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் லோக்சபாவில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்துவார்.

ஆசி கிடைக்காது

இதில் சிக்கல் என்னவென்றால், நிதீஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளிப்பர் என எதிர்பார்க்க முடியாது. பிரதமர் தேர்விலேயே அவர்கள் பங்கு இருக்கும். நிதீஷ், மோடிக்கு ஆதரவளிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் பின்னடைவால் மோடியின் உள்வட்ட அணி வலு குறைந்துள்ளதால் ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் பிரதமர் தேர்வில் முக்கிய பங்கு இருக்கும். தற்போதைய சூழலில் மோடி மீண்டும் பிரதமராக மேலிட ஆசி கிடைக்காது என்று ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பின்னணியில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி அல்லது ராஜ்நாத் சிங் பிரதமராகக் கூடும் என்ற பேச்சு டில்லி வட்டங்களில் வலுத்து வருகிறது. இது பற்றிய தெளிவு, பா.ஜ.,வின் எம்.பி.,க்கள் கூட்டம் கூடிய பின் தான் கிடைக்கும். அதற்கு முன், இன்று காலை 11:00 மணிக்கு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது. ஆட்சி அமைப்பது குறித்து அதில் விவாதிக்கப்படும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Ganesan
ஜூன் 05, 2024 15:23

கிட்டத்தட்ட இவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட 74 வயது சந்திரபாபு மற்றும் 73 வயது நிதிஷ்குமார்.... இவர்கள் இருவருக்கும் ... காலம் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது... இவர்கள் இருவரும் இணைந்து யாரைக் கைகாட்டுகின்றனரோ.... அவர்தான் பிரதமராக முடியும்.. என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது... சந்திரபாபு அவர்கள் சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் நாள் தேதி தர முடியாது எந்த சந்திரபாபுவை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி விரட்டியடித்தார்களோ .... அதே சந்திரபாபுக்காக..... அவரின் ஆதரவு வேண்டும்... அவரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும்.... எனவே அவரை சந்திக்க நாள் தேதி இடம் கேட்டு ஆதரவுக் கடிதத்திற்காக பிரதமர் காத்திருக்கிற வேண்டிய நிலை... காலம்தான் எத்தனை விசித்திரமானது...??? ஆதலால் நமக்கு எல்லாமே முடிந்துவிட்டது என்று எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் யாருமே நம்பிக்கை இழக்கத் தேவையில்லை...


Ganesan
ஜூன் 05, 2024 13:59

இந்தியாவை காப்பாற்றிய I. N . D . I . A


Balamurugan nithyanandam
ஜூன் 06, 2024 15:50

240 எடுத்த கட்சி தோல்வி 99 எடுத்த கட்சி வெற்றி என்ன


nizamudin
ஜூன் 05, 2024 12:53

ஊடகங்களால் அரசு பெருன்பான்மை இழந்துவிட்டன /பாராட்டி ஏமாற்றுவது நல்ல கருத்துக்களை அரசுக்குக்கு தெரிவிக்காமல் இருந்தது /இன்னும் பல


Velan Iyengaar
ஜூன் 05, 2024 12:02

குஜராத் கும்பலிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் பொறுப்பு நாய்டுவுக்கும் நிதிஷுக்கும் இருக்கு அதிகார பதவி எதிலும் குஜராத் கும்பலை ஏற்கவே கூடாது


Velan Iyengaar
ஜூன் 05, 2024 12:01

குஜராத் கும்பலிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் பொறுப்பு நாய்டுவுக்கும் நிதிஷுக்கும் இருக்கு அதிகார பதவி எதிலும் குஜராத் கும்பலை ஏற்கவே கூடாது


SureshKumar Dakshinamurthy
ஜூன் 06, 2024 01:05

கஞ்சா கும்பலிடம் அரசை கொடுக்கவா ? இல்லை இத்தாலி சூனியக்காரியிடம் கொடுக்கவா?


Paramasivam Ravindran
ஜூன் 05, 2024 11:55

இந்திய மக்களிடையே மதத்தின் அடிப்படையில் வெறுப்பை ஏற்படுத்தி, தான் பத்து வருட ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல முடியாமல், தேர்தலை சந்தித்தார் மோடி. அதனால்தான் தோல்வி.


Ramanujadasan
ஜூன் 05, 2024 11:51

தமிழகத்தில் தனியாக நின்று வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள் எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா மட்டுமே . கருணாநிதியம் சரி ஸ்டாலினும் சரி , தங்கள் பலவீனத்தை உணர்ந்து எப்போதும் கூட்டணியோடு தான் தேர்தல் களம் காண்பர்., எடப்பாடி தன்னை ஜெயலலிதா / எம்ஜியார் என்று நினைத்து கொண்டு , தன்னையும் ,தன் கட்சியையும் படு குழியில் தள்ளி விட்டார் . இதுவும் ஒரு வகையில் நன்மைக்கே . பிஜேபி யின் வோட்டு வங்கி பத்து சதவிகீதம் என நிரூபணம் செய்தாகி விட்டது .


Ramanujadasan
ஜூன் 05, 2024 11:48

நவீன இந்தியாவில், ஊடகங்கள் அதிகம் ஆவேசமாக இருக்கும் சமயத்தில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் சமயத்தில், மூன்றாவது முறை வெற்றி பெறுவது, ஆட்சி யை தக்க வைப்பது என்பது அரிதிலும் அரிது. செய்து காட்டிய மோடி திறமை சாலி தான்


Rajah
ஜூன் 05, 2024 11:34

உத்திர பிரதேசத்தில் இப்படியாக முடிவுகள் மாறும் என்று பாஜக கூட கணித்திருக்காது. ஆகவேதான் தேர்தலுக்கு பின்னரான கருத்துக் கணிப்பு ஒரு மாநில முடிவுகளால் பிழைத்துப் போனது. கேரளாவில் பிஜேபி வரும் என்ற கருத்துக் கணிப்பு போல் பல தென்னிந்திய மாநிலங்களில் சரியாகவே இருந்திருக்கின்றது. திமுகவுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் நன்கு சிந்தித்து தங்கள் நிலைப்பாட்டினை வரும் காலங்களில் மாற்றிக் கொள்ள வேண்டும். திராவிடம் என்பது ஒரு விஷம். இதற்கும் தமிழர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. திராவிடத்திற்கு வாக்களித்த உங்களில் எத்தனை பேருக்கு திராவிட மொடல் பற்றித் தெரியும்? கொள்ளை அடிப்பது பாவம் என்பார்கள் ஆனால் கொள்ளை அடிப்பார்கள். பெண் உரிமை பற்றி பேசுவார்கள். ஆனால் பல திருமணங்கள் செய்வார்கள் அல்லது அப்படிச் செய்பவர்களை ஆதரிப்பார்கள். தெய்வம் இல்லை என்பார்கள். ஆனால் அதி தீவிர மதவாதிகளை ஆதரிப்பார்கள், தங்கள் குடும்ப அங்கத்தவர்களை தெய்வ வழிபாட்டிற்கு அனுமதிப்பார்கள, நான் வேறு மதத்தை சார்ந்தவன் என்பார்கள். இதுதான் திராவிட மொடல். இனியும் மது மயக்கத்தில் இருக்க வேண்டாம்.


Ramanujadasan
ஜூன் 05, 2024 11:22

அடுத்த பெரிய கட்சியான காங்கிரஸ் ஐ விட இரண்டரை மடங்கு வெற்றி பெற்ற கட்சி பிஜேபி சில மாநிலங்களில் மட்டுமே சிறிய சறுக்கல்கள் . உபி , ராஜஸ்தான் , மஹாராஷ்டிரா , மேற்கு வாங்களம் என . இது தற்காலிக பின்னடைவே .


Velan Iyengaar
ஜூன் 05, 2024 11:58

இனி தான் பெரிய பெரிய சறுக்கல்களை சந்திக்கும். இது வெறும் ஆரம்பம் தான்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ