உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை எதற்கு திட்டுறீங்க: பா.ஜ.,வை கேட்கிறார் கெஜ்ரிவால்!

என்னை எதற்கு திட்டுறீங்க: பா.ஜ.,வை கேட்கிறார் கெஜ்ரிவால்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கோயில் அர்ச்சகர்களுக்கு கவுரவ சம்பளம் வழங்கும் திட்டத்திற்காக என்னை விமர்சிப்பது ஏன் என டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லியில் உள்ள கோவில் அர்ச்சகர்கள் மற்றும் குருத்வாராவில் பணிபுரிபவர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் கவுரவ சம்பளம் அளிக்கும் வகையில், 'பூஜாரி கிராந்தி சம்மான் யோஜனா' என்ற திட்டத்தை அறிவித்தார்.இது டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததும் அமல்படுத்தப்படும் எனக்கூறியுள்ளார்.இது குறித்து பா.ஜ., மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, ஜனரஞ்சகமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் எனக்கூறினார்.இது தொடர்பாக கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'பூஜாரி கிராந்தி சம்மான் யோஜனா' திட்டத்தை அறிவித்தது முதல் பா.ஜ.,வினர் தொடர்ந்து என்னை விமர்சனம் செய்கின்றனர். என்னை விமர்சனம் செய்வதால், நாட்டிற்கு பலன் கிடைக்குமா என அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். 20 மாநிலங்களில் உங்கள் ஆட்சி உள்ளது. குஜராத்தில் 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளீர்கள். அங்கு, இதுவரை அர்ச்சகர்கள் உள்ளிட்டோரை நீங்கள் மதிக்காதது ஏன்? இனிமேலாவது அதை செய்யுங்கள். அனைவருக்கும் அதற்கான பாதையை நான் காட்டி உள்ளேன். என்னை விமர்சிப்பதற்கு பதில், அனைவரும் பலன் பெறும் வகையில், நீங்கள் ஆட்சி செய்யும் 20 மாநிலங்களில் அதனை நீங்கள் அமல்படுத்தலாமே? என்னை விமர்சிப்பது ஏன்? இவ்வாறு கெஜ்ரிவால் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Alagusundram Kulasekaran
ஜன 02, 2025 07:35

நீ என்ன தில்லாலங்கடி வேலை பார்த்தாலும் களி திங்கும் நாள் விரைவில் வரும் இலச்சினை மக்கள் தூக்கி போட்டு தள்ளும் காலம் இத்தனை நாட்கள் கோயில் பூசாரிகள் மீது இல்லாத அக்கரை இப்போது எங்கிருந்து வந்தது தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் போதிமரம் வாடை வரும் போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு


ஆரூர் ரங்
டிச 31, 2024 21:26

அமலில் இல்லாத திட்டத்துக்காக மக்களிடம் போலி விண்ணப்பங்களில் தனிப்பட்ட விவரங்களை வாங்கிய கேடிவாலு. உங்களை நம்பி பூசாரிகள் விவரங்களை கொடுத்தால் விக்கிரகங்களாவது பாக்கி இருக்குமா?


Bye Pass
டிச 31, 2024 21:14

டில்லியில் நிறைய ரிக் ஷா ஓட்டுனர்கள் கூலி தொழிலாளர்கள் ..அவர்கள் மீது கரிசனம் காட்டலாமே


GMM
டிச 31, 2024 20:31

அரசியல் நோக்கம் மக்கள் நல கொள்கை வகுப்பது. தேச பாதுகாப்பு, பொருளாதார சிதைவு இல்லாமல் திட்டம் வகுப்பது. நீர் ஆட்சியை கைப்பற்ற மகளிர் இலவசம் பஸ் பயணம். உரிமை தொகை. மின் கட்டணம் இலவசம். அந்நியருக்கு ஓட்டுரிமை, குடியுரிமை இலவசம் .அதற்கும் மசியவில்லை என்றால் பஸ், மின் வாரியம் சொந்தமாக்கி விடுவீர். அந்நியருக்கு டெல்லியை சொந்தமாக்கி எழுதி கொடுத்து விடுவீர். கோவில் அர்ச்சகர் கவுரவ சம்பளம் ஆரம்பித்து மதம், அனைத்திற்கும் விரிவு படுத்துவீர் . அர்ச்சனை இந்துக்கள் பணி . மத சார்பற்ற கூட்டம் இதில் நுழைய வேண்டாம். மக்கள் பாதுகாப்பு இருக்கும் என்று வரி கட்டிவந்தால், கடனாக்கி, அந்நியனுக்கு அடிமை படுத்தி விடுவீர். விடிந்தால் விலங்குடன் மக்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற தயாராக்கி விடுவீர். ஆபத்தான அரசியல் வாதி கெஜ்ரிவால். டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இந்திய நீதி அரசியல் குற்றவாளிகளுக்கு தனி பாதை வகுத்து விட்டது. தேச பாதுகாப்பு கடினமாகிவிடும்.


Rajan A
டிச 31, 2024 20:04

ஊரான் பணத்தை தான்தோன்றித்தனமாக செலவு செய்வதை பார்த்து கொண்டு இருக்கிறது


V வைகுண்டேஸ்வரன்
டிச 31, 2024 20:03

பாஜக வாசகர்கள் இங்க வரவே மாட்டார்கள். ஹா ஹா ஹா...


ghee
ஜன 01, 2025 01:12

இதோ வந்துட்டார் புருடா வைகுண்டம்......என்ன சொல்ல வரீங்க


Rafiq Ahamed
டிச 31, 2024 19:45

எனக்கும் பிராமின்களுக்கும் உள்ள அன்பு தொடரும் இது என் தாத்தா காலத்தில் இருந்து ஆரம்பமானது...


Kavi
டிச 31, 2024 19:22

பிராடு அதற்கு நீ ஒரு பதில் சொன்னால் மக்கள் எல்லாருமே நம்பர் வேண்டுமா முதலில் குடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு மிடில் கிளாஸ் மக்களை வாட்டி எடுக்கும் மின்சாரா கட்டணம் எவரு உள்ளது தெரியுமா


Easwar Kamal
டிச 31, 2024 19:18

நான்தான் பிஜேபி சொன்னா மாதிரி காங்கிரஸ்கூட டூ விட்டுட்டேனே அப்புறம் எதுக்கு என்னை திட்டுறீங்க . மனசு வலிக்குதுல


Rajasekar Jayaraman
டிச 31, 2024 18:50

திட்டாமல் என்ன செய்ய கோர்ட் இன்னும் தண்டிக்கவில்லை.