உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹஜ் யாத்திரைக்கு ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் மனைவி கைது

ஹஜ் யாத்திரைக்கு ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் மனைவி கைது

ஆர்.கே.நகர், சென்னை, தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது, 47. டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.காரைக்குடியை சேர்ந்த நைனார் முகமது என்பவர், தான் ஹஜ் புனித யாத்திரைக்கு பயணியரை அனுப்பி வருவதாக, சாகுல் அமீதை அணுகியுள்ளார். இதை நம்பிய சாகுல் அமீது, கடந்த ஏப்ரலில், 94 பயணியரை நைனார் முகமது மூலம், ஹஜ் யாத்திரைக்கு அனுப்பியுள்ளார். நைனார் முகமதுவின் மனைவி சிந்துாஸ் பானு, 44 என்பவர் வில்லிவாக்கம், அகத்தியர் நகரில் வசிக்கிறார். ஹஜ் பயணத்திற்கான தொகையை, நைனார் முகமது கூறியபடி, அவரது மனைவி சிந்துாஸ் பானு என்பவரது வங்கி கணக்கில் சாகுல் அமீது செலுத்தியுள்ளார்.இதைத் தொடர்ந்து, மேலும் 36 பயணியரை அடுத்த குழுவில் புனித யாத்திரைக்கு அனுப்ப, நைனார் முகமது 17 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். அந்த தொகையையும், சிந்துாஸ் பானுவின் வங்கி கணக்கில் சாகுல் அமீது செலுத்தியுள்ளார். இந்நிலையில், 94 பயணியர் குழு, நைனார் முகமதுவின் ஏஜென்சியின் சேவை சரியில்லை என, சாகுல் அமீதிடம் புகார் கூறியுள்ளனர்.இதைத் தொடர்ந்து, இரண்டாவது குழு பயணத்தை ரத்து செய்யும் படியும், 17 லட்சம் ரூபாயை திரும்பி தரும்படியும் நைனார் முகமதுவிடம், சாகுல் அமீது கேட்டு உள்ளார். ஆனால், நைனார் முகமது தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சாகுல் அமீது புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து சிந்துாஸ் பானுவை நேற்று கைது செய்தனர். விசாரணையில், நைனார் முகமது சவுதி அரேபியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரை, கைது செய்து அழைத்து வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sampath Kumar
நவ 10, 2024 17:32

ஜாதி மதம் ஆண் பெண் பதம் இன்றி பரவி கிடக்குது மோசடி மனித நேயம் மடிந்து விட்டது இதில் மதம் இறைநம்பிக்கை எல்லாம் புளித்து போய்விட்டது


Ramesh Sargam
நவ 10, 2024 13:41

அந்த மதத்தினர் பெயரைக்கேட்டாலே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது.


வாய்மையே வெல்லும்
நவ 10, 2024 13:39

இந்த அம்மையாருக்கு ஹஜ் யாத்திரை சிறந்த பணிக்கு "குருவி-திலகவதி"பரிசு குடுத்து அரசு வேலையும் கொடுத்து அழகு பார்க்கும் . கேடுகெட்ட ட்ராவிடிய மாடல் அரசு.


வைகுண்டேஸ்வரன்
நவ 10, 2024 15:29

அட ஊரும் பேரும் போட தில் இல்லாத ஆரிய கொத்தடிமை யே, திராவிட மாடல் அரசுக்கும் இந்த மோசடிப் பேர்வழிக்கும் , ஏமாந்த அறிவிலிகளுக்கும் என்னய்யா சம்பந்தம்??


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 10, 2024 12:49

மனைவியை சிக்க வைத்துவிட்டு அவன் சவூதி பறந்துள்ளான் .... ஒரு சராசரி குடும்ப ஆண் செய்கிற காரியமில்லை இது .... இரண்டும் போகிற போக்கில் சேர்ந்து கொண்ட பாசப் பறவைகள் ....


Barakat Ali
நவ 10, 2024 12:44

அல்லாஹ் முன்பு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை நாமே நம்பவில்லை என்றால் நமது இஸ்லாத்துக்கு மாற விரும்புவோர் நம்புவார்களா ????


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2024 05:46

பலரும் வாயை கட்டி வயிற்றை கட்டி பணம் சேர்ப்பதை கண்டுள்ளேன் , இப்படி மோசம் செய்கின்றார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை