உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை பெற கணவருக்கு பரோல் கேட்கும் மனைவி

குழந்தை பெற கணவருக்கு பரோல் கேட்கும் மனைவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : குழந்தை பெற்று கொள்வதற்காக, சிறையில் இருக்கும் கணவருக்கு, 'பரோல்' வழக்குமாறு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்தவர் ஆனந்த். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, 2019ல் கோலார் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.ஆயுள் தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆனந்த் மேல்முறையீடு செய்தார். விசாரித்த நீதிமன்றம், ஆயுள் தண்டனையை, 10 ஆண்டு சிறையாக மாற்றியது.சிறை செல்வதற்கு முன்பே ஆனந்தும், ஒரு இளம்பெண்ணும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதற்காக, ஆனந்துக்கு, 'பரோல்' வழங்கும்படி உயர் நீதிமன்றத்தில் இளம்பெண் மனு செய்தார். விசாரித்த நீதிமன்றம், 2023ம் ஆண்டு மார்ச் 31 முதல், ஆகஸ்ட் 20 வரை 143 நாட்கள், ஆனந்தை பரோலில் விடுவிக்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.இதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 11ல் ஆனந்தும், இளம்பெண்ணும் திருமணம் செய்தனர். பரோல் காலம் முடிந்ததும், மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, ஆனந்த் சிறைக்கு திரும்பினார்.இந்நிலையில், குழந்தை பெற்று கொள்வதற்கு வசதியாக, ஆனந்தை 90 நாட்கள் பரோலில் அனுப்பும்படி, பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரியிடம், ஆனந்தின் மனைவி மனு கொடுத்தார். அவர்கள் மனுவை பரிசீலனை செய்யவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மனுவில், 'திருமண வாழ்க்கை வாயிலாக குழந்தை பெற்று கொள்வது, அனைவருக்குமான உரிமை. குழந்தையை பெற்று எடுப்பது, என் நடத்தையை சரி செய்ய உதவுகிறது. 'என் கணவர் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் போது, அமைதியான வாழ்க்கை வாழ, குழந்தை இருப்பது வழிவகை செய்யும். இதனால், என் கணவரை பரோலில் விடுவிக்க, சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Subash BV
ஜூன் 04, 2024 14:14

Nothing strange. WE HAVE A NONSENSE CONSTITUTION.


Kasimani Baskaran
ஜூன் 03, 2024 22:34

வீட்டை சிறையாக மாற்றி நாலு அதிகாரிகளை போட்டு குடும்பம் நடத்த அனுமதிக்கலாம். பரோலில் விட்டதே கேப்மாரித்தனம்...


ஆரூர் ரங்
ஜூன் 03, 2024 22:20

கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அளிக்கப்பட்ட லட்சத்தீவு எம்பி மக்கள் சேவை செய்ய ஆளில்லாமல் போய்விடும் என்ற காரணத்தைக்கூறி தண்டனையே நிறுத்தி வைப்பு. அன்னியச் செலாவணி வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட ஜவாஹிருல்லா ஜெயிலுக்குப் போகாமல் ஜம்மென்று எம்எல்ஏ வாக இருக்கிறார். அப்படியிருக்கும்போது பாவப்பட்ட ஏழை சின்னஞ்சிறுசுகள் ஏதோ ஜாலியா இருக்கட்டுமே.


r ravichandran
ஜூன் 03, 2024 23:43

முற்றிலும் உண்மை


ஆரூர் ரங்
ஜூன் 03, 2024 22:15

கெஜரிவாலுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜாமீன்.பல வழக்குகளில் தண்டிக்கப்பட்ட லாலுவுக்கு உடல் நலக்குறைவுக்கு ஜாமீன் அளித்து பிரச்சாரம் செய்ய வசதி. வயசான காரணத்துக்காக பொன்முடிக்கு ஜாமீன். அப்போ சாதாரண குடிமகனுக்கு மட்டும் ஹனிமூன் பரோல் கொடுப்பதற்கு என்ன தயக்கம்?


r ravichandran
ஜூன் 03, 2024 23:45

அரசியல் வியாதிகளுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டம் இருக்க கூடாது. தங்கள் கருத்து வரவேற்க தக்கது.


சொல்லின் செல்வன்
ஜூன் 03, 2024 21:59

புதுசு புதுசா கண்டுபிடிக்கறாங்கய்யா


sri
ஜூன் 03, 2024 21:54

எப்போ கல்யாணம் பண்ணிக்கொள்ள வீட்டிற்கு கோர்ட் அனுப்பியதோ, குழந்தை பெற்றுக் கொள்ள கைதிகளை வீட்டுக்கு அனுப்புவதுதான் ஞாயம்


Ramesh Sargam
ஜூன் 03, 2024 21:27

ஒன்னு செய்யலாம், அந்த பெண்மணியை சிறைக்கு அனுப்பிவைக்கலாம். அங்கேயே குழந்தை பெற்றுக்கொள்ளட்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ