உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்குமா?

பா.ஜ.,விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்குமா?

சென்னை: லோக்சபாவில் பா.ஜ.,விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஒரு கட்சி 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், 441 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 11 மணி நிலவரப்படி தனித்து 246 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் பா.ஜ., கூட்டணி 310 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்படி, தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளது என்ற போதிலும், பா.ஜ., கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் சிறிது நேரம் பொறுத்திருக்க வேண்டும்.கடந்த 2014ல் பா.ஜ., 282 தொகுதிகளிலும், 2019 ல் 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Jones
ஜூன் 04, 2024 16:27

அதிமுகவின் வீழ்ச்சி காரணம் ஓபிஎஸ் மற்றும் தினகரன் இவர்கள் இருவரையும் கட்சியின் உறுப்பினராக சேர்க்கவே கூடாது


K givindaraj
ஜூன் 04, 2024 16:16

அண்ணாமலை கோவிந்தா


PURUSH BHU
ஜூன் 04, 2024 16:01

வாய்ப்பில்லை


Sivaraman
ஜூன் 04, 2024 13:58

எடப்பாடி உள்ளவரையில் அதிமுக உயிர் பெறாது.


chennai sivakumar
ஜூன் 04, 2024 13:32

முட்டாள் தமிழர்கள் இருக்கும் வரை முன்னேற்றம் என்பதை தேட வேண்டும்


Shiva
ஜூன் 04, 2024 12:39

No. Definitely not.


தூயோன்
ஜூன் 04, 2024 12:31

தநி மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காது. கிடைச்சால் இஷ்டத்துக்கு தியானம், யாகம்னுட்டு மக்களை முடக்கி ஆட்டம் போடுவாங்க. செண்ட்ரலைஸ்டு ஊழல் அதிகமாயிடுச்சு. இதுக்கெல்லாம் தேர்வு கூட்டணி ஆட்சி ஒன்றே. ஆளாளுக்கு ஆட்டையப் போடுங்க.


Karthik
ஜூன் 04, 2024 12:28

பிஜேபி admk உடன் கைகோர்த்திருக்க வேண்டும் admk+bjp வோட்டை கூட்டினால் அருமையாக வெற்றி பெற்றிருக்கலாம் இப்பொழுது இரண்டு கட்சிகளும் தோல்வியை தழுவி இருக்கிறது


RAMESH
ஜூன் 04, 2024 17:03

hey karthik you said well..


Ramesh Sargam
ஜூன் 04, 2024 12:11

பாஜக தனிப்பெரும்பான்மை பெறவேண்டும் என்பதே பலரது விருப்பம். முடியாத பட்சத்தில் அதன் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தாலும் சிறப்புதான். எக்காரணம் கொண்டும் அந்த I.N.D.I.A. கூட்டணி அதிக இடங்களை பெறக்கூடாது என்பதும் பெரும்பான்மையான மக்களின் விருப்பம்.


தமிழ்
ஜூன் 04, 2024 15:10

இன்னும் நல்லா சமாளி.


K givindaraj
ஜூன் 04, 2024 16:19

ஏன் இந்தியாவை அதானிக்கும் அம்பானிக்கும் விற்கவா


கனோஜ் ஆங்ரே
ஜூன் 04, 2024 12:00

சோனமுத்தா.... போச்சா...?


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ