உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்

நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீங்கள் சொன்ன பொய்கள் எவ்வளவு என்பதை நாளை நாங்கள் சொல்கிறோம் என்று எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி தந்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஜூலை 28) விரிவாக பேசினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளித்துக் கொண்டே வந்தார்.அவரின் பேச்சின் ஊடே, எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் சிலர் கூச்சலிட்டு இடையூறு செய்த வண்ணம் இருந்தனர். சபாநாயகர் எவ்வளவோ கேட்டும் அவர்கள் தங்களின் குறுக்கீடுகளை கைவிடவில்லை. எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா குறுக்கிட்டு பேசினார். அவர் கூறியதாவது; அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) மத்திய வெளியுறவு அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் வேறு ஏதோ சில நாடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அவர்களின் கட்சியில் அந்நியர்களின் முக்கியத்துவம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் அனைத்து விஷயங்களும் இங்கே திணிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் தான் அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு அவர்கள் அங்கேயே தான் உட்கார்ந்து இருக்க போகிறார்கள்.அவர்கள் (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) பேசும் போது, நாங்கள் பொறுமையாக கேட்டோம். நீங்கள் எத்தனை பொய்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்பதை நாளை நான் இங்கே சொல்வேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம் இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் உண்மையை கேட்க மறுக்கிறார்கள். வெளியுறவு அமைச்சர் பேசும் போது இதுபோன்ற குறுக்கீடுகள் ஏற்புடையதா? எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் இதை புரிய வைக்க வேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R.RAMACHANDRAN
ஜூலை 29, 2025 07:45

காங்கிரசு கட்சியினர் செய்த குற்றங்களுக்கு தண்டனையை அனுபவிக்கின்றனர்.அவர்களை போல நாங்கள் குற்றம் செய்கிறோம் என்பவர்கள் அதற்கான தண்டனையை விரைவில் அனுபவிப்பர்.சீர்திருத்த ஆட்சி செய்வதற்கு பதிலாக காட்டாட்சி நடத்துகின்றனர் இந்நாட்டில்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 29, 2025 06:27

“தாங்கள் பொய் சொல்லவில்லை”, என்று சொல்ல வாய் வரல்லே இந்த உத்தமனுங்களுக்கு.


Murugesan
ஜூலை 28, 2025 23:33

பணம் பதவிக்காக காட்டிக்கொடுக்கிற கூட்டம் காங்கிரஸ்காரனுங்களும் அவனுங்க கூட்டாளிகளான ஊழல்ல பணத்தில வாரிசு திருடர்களும், அந்நிய கைக்கூலி உண்டிக்குலிக்கி, பாகிஸ்தானிய தீவிரவாதிகளை விட மிக மோசமாக இந்திய திரு நாட்டை அழிக்க வந்த பிறவிகள்


Tamilan
ஜூலை 28, 2025 22:20

இவர்கள் சொன்னது செய்தது எல்லாமே பொய் என்பதை ஒப்புக்கொண்டு விட்டாரோ


Thravisham
ஜூலை 29, 2025 03:23

நீ தமிழன் அல்ல. திருட்டு த்ரவிஷன்களின் கைக்கூலி


Kasimani Baskaran
ஜூலை 28, 2025 21:24

அப்படியென்றால் நாளை எதிரிக்கோஷ்டி பாராளுமன்றத்துக்கு வராது..


SP
ஜூலை 28, 2025 21:15

ராணுவத்தை பற்றியோ நாட்டின் பாதுகாப்பு பற்றியோ எந்த விவாதமும் கூடாது என்று கண்டிப்பாக சொல்ல வேண்டும்


Ramesh Sargam
ஜூலை 28, 2025 20:47

நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: நாளை மட்டும் என்ன அவர்கள் வாயைப்பொத்திக்கொண்டு கேட்பார்களா? ஹூ ஹூம். கேக்கவே மாட்டார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள், சபை ஒழுங்காக நடக்கக்கூடாது. வாக்களித்த மக்களுக்கு எதுவும் நல்லது நடந்துவிடக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை