உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமின் கிடைக்குமா ? உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

ஜாமின் கிடைக்குமா ? உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

துடில்லி: மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் கோரிய மணீஷ் சிசோடியா அப்பீல் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் டில்லி ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.இதில் நடந்துள்ள பணமோசாடி தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியானதையடுத்து, டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவும் கடந்த மே 21-ம் தேதி தள்ளுபடியானது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜாமின் மனுவை கடந்த 6-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.இந்த வக்கில் இன்று (ஆக.09) முக்கிய தீர்ப்பை வெளியிடுகிறது உச்சநீதிமன்றம் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VENKATASUBRAMANIAN
ஆக 09, 2024 08:32

முதலில் ஜாமினை எடுக்கவேண்டும். யாருக்கும் கொடுக்க கூடாது. முக்கியமாக அரசியல் வாதிகளுக்கு. எல்லோருடைய யோக்கியதை எல்லோருக்கும் தெரிந்ததே


Kasimani Baskaran
ஆக 09, 2024 07:13

சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனில் நடந்த கலவரத்தில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு சில நாட்களில் தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்கள். ஆனால் சுதந்திரம் வாங்கி முக்கால் நூற்றாண்டு ஆன பின்னரும் வழக்குக்களை உலகில் மிக மிக மெதுவான வேகத்தில் தீர்ப்பு சொல்லும் ஒரு நீதித்துறையை வைத்திருக்கிறோம் என்பது வருந்தத்தக்க உண்மை. புதிதாக தண்டனையை நிறுத்தி வைக்கும் நீதியை பிரீஸ் செய்யும் முறையையும் வேறு கண்டுபிடித்து தொலைத்து இருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை