உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் ஏன் எடுத்தார் இந்த முடிவு !

கெஜ்ரிவால் ஏன் எடுத்தார் இந்த முடிவு !

புதுடில்லி: ஜாமினில் வெளியே வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் நேர்மையானவன் என்று வெற்றிச்சான்று அளித்தால் முதல்வர் நாற்காலியில் அமர்வேன்; இல்லாது போனால் அந்த பதவி தமக்கு வேண்டாம் என அதிரடியாக அறிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல முறை ஜாமின் கேட்டும் சுப்ரீம் கோர்ட் 6 மாதத்திற்கு பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தது. ஆனாலும் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. குற்ற வழக்கில் சட்ட நெறிமுறைப்படி முதல்வர் கைது செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று கைதை கோர்ட் நியாயப்படுத்தியது. இதில் இருந்து அடிப்படை முகாந்திரம் இருப்பதாகவே அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர் . மேலும் வெளியே வழக்கு தொடர்பாக எதுவும் பேசக்கூடாது, முதல்வர் கோப்பில் கையெழுத்து கூட போட கூடாது என்ற பல்வேறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கெஜ்ரிவால் இன்று கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். இவரது உரையில் சற்றும் எதிர்பாராத விதமாக ராஜினாமா முடிவை அறிவித்தார். இவரது இன்றைய பேச்சில் ; ' நான் சிறையில் இருந்த போது எனக்காக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. கடவுள் என்னோடு இருந்நதால் தான் நான் சதிகளை முறியடித்து இப்போது நிற்கிறேன். பா.ஜ.,வுக்கு எதிரான முதல்வர்கள் மீது மத்திய அரசு பொய்யான வழக்குகளை பதித்து வருகிறது. சிறையில் இருந்த போதும் நான் ஜனநாயகத்தை காத்திடவே ராஜினாமா செய்யவில்லை. தரமான கல்வி, தடையில்லா மின்சாரம் நாங்கள் வழங்குகிறோம். என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பா.ஜ.,வினர் தான் ஊழல்வாதிகள். தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும் முன்னதாகவே வரும் நவம்பர் மாதமே தேர்தலை நடத்தட்டும். நாங்கள் அக்னி பரீட்சைக்கு தயார். மக்கள் எங்களை நேர்மையானவர் என்று ஓட்டளித்து சான்றளித்தால் மட்டுமே நாங்கள் பதவி நாற்காலியில் அமர்வோம். ஆட்சியை கலைக்காமல் தொடர்ந்து நடத்துவோம். புதிய முதல்வரை விரைவில் அறிவிப்போம் ' . இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

பா.ஜ., கடும் சாடல்

கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மன்சிந்தர்சிங் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் அறிவித்த உத்தரவின்படியே அவர் ராஜினாமா செய்துள்ளார். அவரைதான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஒரு கையெழுத்து கூட போடக்கூடாது என்று மறைமுக உத்தரவிட்டிருக்கிறதே ! இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. மேலும் 2நாளில் ராஜினாமா என்பது அவரது மனைவியை முதல்வராக்கிட முயற்சி நடக்கிறது. இதில் சில எம்எல்ஏ.,க்கள் சம்மதம் பெற வேண்டியுள்ளது. இவ்வாறு சிங் கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் ராஜினாமா புதிதல்ல !

* டில்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வது இது முதல் முறை அல்ல . கடந்த அரசியல் வரலாற்றில் ஏற்கனவே ராஜினாமா செய்து உடனடியாக தேர்தலை சந்தித்து மீண்டும் முதல்வரானார். * இது போல் ராஜினாமா செய்தால் மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற முடியும் என நினைக்கிறார்.* 2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை துவக்கினார் கெஜ்ரிவால். 2013ம் ஆண்டில், அவர் டில்லியின் முதல்வராக பதவியேற்றார். 49 நாட்களில் அவரால் முன்மொழியப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு ஆதரவைத் திரட்ட முடியாமல் ராஜினாமா செய்தார். * 2015 டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத பெரும்பான்மையைப் பெற்றது. தொடர்ந்து நடந்த 2020 தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று டில்லியில் ஆட்சியைத் தக்க வைத்தது.* தொடர்ந்து, மூன்றாவது முறையாக டில்லியின் முதல்வராக அவர் பதவியேற்றார். * 2022 பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மற்றொரு பெரும் வெற்றியை எட்டி பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தாமரை மலர்கிறது
செப் 15, 2024 23:11

இப்போது மக்கள் தேர்ந்தெடுக்க வில்லையா என்ன? ராஜினாமா செய்தால் தான் டெல்லி அரசு நடைபெறும். பதவியை உபயோகப்படுத்தி கொள்ளையடித்தால், மோடி ஆட்சியில் தப்பிக்க முடியாது. மீண்டும் மக்கள் தேர்ந்தெடுத்தாலும், முதல்வர் ஆகமுடியாது. அமலாக்கத்துறை அர்ரெஸ்ட் செய்து உள்ளே தள்ளிவிடும். கொள்ளையடிப்பவர்கள் முதல்வர் பதவியில் அமர்வதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது.


S SRINIVASAN
செப் 15, 2024 22:24

sema drama, Mamta and aravind both speaking together


santhanam
செப் 15, 2024 21:19

திரு கேஜரிவால் பெயில் மற்றும் பெயில் கண்டிஷன் என்ற தண்டனையும் இப்பொழுதே கொடுத்து விட்டது இறக்கை வெட்டப்பட்ட பறவை என்பது நிதர்சனம்


sankar
செப் 15, 2024 21:13

தம்பி - நீ குற்றவாளியா இல்லையா என்று கோர்ட்தான் சொல்லணும் - மக்களோ அல்லது மற்ற கட்டப்பஞ்சாயத்துகளோ அல்ல


N.Purushothaman
செப் 15, 2024 20:04

உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்து அதுல விதிச்ச நிபந்தனைகளால் ஒரே அசிங்கமா போயிடுச்சி குமாரு ....


Venkateswaran Rajaram
செப் 15, 2024 19:55

ஆமா இப்படியே ஒவ்வொருத்தனும் கொலையும் செஞ்சிட்டு மக்கள் சொல்லட்டும் தீர்ப்புன்னு சொல்ற மாதிரி இருக்கு, அப்ப நீதிமன்றங்கள் எல்லாம் எதற்காக உள்ளன, நீதிமன்றங்கள் மக்கள் சொல்வதைக் கேட்பார்களா அல்லது தகுந்த ஆதாரங்களை பரிசளித்து தீர்ப்பு சொல்வார்களா


theruvasagan
செப் 15, 2024 19:35

உலக மகா நடிப்புடா சாமி. பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை என்ற நிலையில் இப்படி கம்பி கட்டறது சென்டிமென்ட் டெக்னிக்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 15, 2024 19:27

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை நாம் அறிந்தது என்னவென்றால் தில்லி, ஹரியானாவில் மட்டுமே அவரது ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு உள்ளது ..... தில்லி மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்து அந்த எண்ணத்தைப் பொய்யாக்கியது .... பதவி விலகினால் அனுதாப வாக்குகளாவது சிறிது கிடைக்கும் .....


என்றும் இந்தியன்
செப் 15, 2024 18:27

எனக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் முதல்வர் பதவி இல்லை என்று சொன்னதால் தான் இந்த முடிவு எடுக்கின்றேன் மக்களே நான் மிகவும் உத்தமன் நான் உங்கள் நண்பன் உங்களுக்காக பாடுபடத்தான் இந்த பதவியில் இருந்தேன் ................................ ஆகவே ராஜினாமா என்று என்னவெல்லாம் டப்பா அடித்திருப்பான் இவன் இதை மக்கள் நம்பி அடுத்த தடவை இவனை தேர்ந்தெடுப்பார்கள் என்று முழு நம்பிக்கையில் இந்த உளறல். இந்த கலியுகத்தில் நீ தான் உதவ வேண்டும் ஆண்டவனே இனிமேலும் இந்த மாதிரி ஆட்களை கீழே அனுப்பாதே நீயே வைத்துக்கொள் இந்திய முதல்வர்கள் பலர் ஜன சேவக முதல்வர்களாக இல்லாமல் பணசேவை முதலைகளாக இருக்கின்றார்கள். போதும் ஆண்டவா இந்த மாதிரி சோதனை


Iyer
செப் 15, 2024 18:11

If you have any shame left in you, do not con any Election until you are absolved and acquitted of the Criminal ges against you


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை