உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம்ராட் சவுத்ரிக்கு முதல்வர் பதவியா? அமித் ஷா பேச்சால் பீஹாரில் சலசலப்பு

சாம்ராட் சவுத்ரிக்கு முதல்வர் பதவியா? அமித் ஷா பேச்சால் பீஹாரில் சலசலப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''பீ ஹார் சட்டசபை தேர்தலுக்கு பின், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மிகப்பெரிய ஆளாக மாற்றி, உயர்ந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வைப்பார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது, ஆளும் தே.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏ ற்படுத்தி உள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் கு மார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தாராபூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியை ஆதரித்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று பேசியதாவது: தாராபூர் தொகுதியில் சாம்ராட் சவுத்ரி போட்டியிட வேண்டும் என்பதற்காக, ஐக்கிய ஜனதா தளத்தை சமாதானப்படுத்தி விட்டுக்கொடுக்க வைத்தோம். தங்கள் எம்.எல்.ஏ.,க்களை அமைச்சர்களாக ஆக்குங்கள் என, மற்ற இடங்களில் மக்கள் கோருவர். ஆனால் இங்கு, துணை முதல்வரே களத்தில் உள்ளார். சாம்ராட் சவுத்ரியை வெற்றி பெற செய்யுங்கள். தேர்தல் முடிந்ததும், அவரை மிகப்பெரிய ஆளாக மாற்றி உயர்ந்த இடத்தில் பிரதமர் மோடி வைப்பார். இவ்வாறு அவர் பேசினார். இதன் மூலம், முதல்வர் வேட்பாளராக சாம்ராட் சவுத்ரியை பா.ஜ., முன்னிறுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 'தே.ஜ., கூட்டணி வென்றால், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார். 'அவரை முதல்வராக்க பா.ஜ., விரும்பாது' என, காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி பிரசாரம் செய்து வரும் நிலையில், அமித் ஷாவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMESH KUMAR R V
அக் 31, 2025 12:55

காலம் மாறும் காட்சிகளும் மாறும் அதுவே பிஜேபியின் வெற்றி ரகசியம். தாமரையே மலரும்.


Iyer
அக் 31, 2025 11:59

தோல்வி ஜுரத்தில் - RJD மற்றும் CONGRESS கட்சிகள் கிளப்பிவிடும் புரளி தான் இது.


தலைவன்
அக் 31, 2025 11:33

போகாத ஊருக்கு வழி சொல்லும்?? நவம்பர் மாதத்தில் தேஜஸ்வி யாதவ் நாட்டிலேயே இளம் முதல்வராக பதவியேற்பார். அடுத்த ஆண்டு யோகியின் காட்சிக்கு முடிவுரை எழுதி அகிலேஷ் யாதவ் முதல்வராவார். கலகலக்கும் பாஜக கட்சி அதுக்கப்புறம் அடக்கி வாசிக்கும்.


oviya vijay
அக் 31, 2025 08:15

கதறல் அருமை


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 01:47

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு பின், துணை முதல்வர் விஜய் ஜோசப்பை மிகப்பெரிய ஆளாக மாற்றி, உயர்ந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வைப்பார், என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி, கூட்டணிக்கு ஆள் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 01:45

துணை ஜனாதிபதிக்கே ஒரு நணபகல் நேர மயக்கத்தில் இருக்கும் போது பியூஸை பிடுங்கி வீட்டுக்கே அனுப்பி வெச்சிட்டோம். இவரு என்ன பெரிய இதா? -


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 01:39

நிதிஷ் அப்போ அடுத்த அந்தர்பல்டி அடிக்க தண்டால் எடுத்து தயாராக இருப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை