உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திர கோயில்களை தமிழகம் பின்பற்றுமா?

ஆந்திர கோயில்களை தமிழகம் பின்பற்றுமா?

சென்னை: கோவில்களை நிர்வகிக்கலாமே தவிர, கோவிலின் நடைமுறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள் எதிலும் அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிடவே கூடாது என ஆந்திர மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி முடிந்து, சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைந்துள்ளது. முந்தைய ஆட்சி காலத்தில் ஹிந்து கோவில்களை நிர்வாகம் செய்வதில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக நாயுடுக்கு புகார்கள் வந்தன. அந்த புகார்களில் ஒன்று தான், திருப்பதியில் லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தினர் என்பது. அது தவிர, பல கோவில்களில் ஹிந்து அல்லாத வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பணியாற்றுகின்றனர்; ஹிந்து அறநிலைய துறையில் பணியாற்றும் அதிகாரிகள், கோவில் நடை முறைகளில் தலையிடுகின்றனர் எனவும் தொடர்ந்து புகார்கள் குவிந்தன. சிறப்பு ஆணையர் வாயிலாக அந்த புகார்கள் அனைத்தையும் விசாரித்து அறிக்கை தர நாயுடு உத்தரவிட்டார். ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆந்திர அரசு நேற்று முக்கியமான ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஹிந்து கோவில்களின் நிர்வாக பொறுப்பில் உள்ள அறநிலையத் துறை ஆணையர், மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் யாரும், எந்த கோவிலின் வேத, ஆகம மரபுகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், நடைமுறைகளில் எந்த வகையிலும் தலையிடவே கூடாது. கோவிலை நிர்வகிப்பது மட்டுமே இந்த துறை அதிகாரிகளின் பொறுப்பு. நிர்வாகம் தவிர ஏனைய விஷயங்களில் குறுக்கிடக் கூடாது.சடங்குகள், வழிபாட்டு முறைகள், யாகம், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை எப்போது நடத்த வேண்டும்; எவ்வாறு நடத்த வேண்டும்; என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; யார் என்ன பங்காற்ற வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. அந்த விஷயங்களில் அதிகாரிகள் தலையிடவும் கூடாது. மதம் சார்ந்த இத்தகைய விஷயங்களில் சமய பெரியோர்களின் கருத்துகளை கேட்டு, கோவிலின் அர்ச்சகர்களே முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், அந்தந்த கோவில்களின் மூத்த ஊழியர்களை கொண்ட வைதீக குழுக்களை அமைக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், மடாதிபதிகளின் கருத்துக்களை கேட்கலாம். ஒரே மதமாக இருந்தாலும் எந்த ஒரு பிரிவினரும், தங்களின் நடைமுறைகளை பின்பற்றும்படி மற்றொரு பிரிவினரை கட்டாயப்படுத்த கூடாது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. கோவில்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அறநிலைய துறை, அந்த வேலையை மட்டும் கவனிக்காமல் கோவில்களை அரசின் சொத்து போல பாவித்து, ஆளும் கட்சியினரை திருப்திப்படுத்த முறைகேடுகள் செய்வதாக நாடெங்கும் புகார்கள் எழுகின்றன. பக்தர்கள் மனம் புண்படும் விதமாக, கோயில் சடங்குகள் சம்பிரதாயங்களை இஷ்டப்படி மாற்றுவதும் பரவலாக நடக்கிறது. தலைவர்களின் பிறந்த நாள், திருமண நாளை ஒட்டி கும்பாபிஷேக தேதி குறிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட, கோவில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஆன்மிக அமைப்புகள் கேட்டு வருகின்றன. என்றாலும், பூனைக்கு மணி கட்ட எந்தக் கட்சியும் முன்வரவில்லை. முதல் மாநிலமாக ஆந்திரா முதல் அடி எடுத்து வைத்துள்ளது. நாயுடு அரசு இந்த முயற்சியை வெற்றியாக மாற்றினால், மற்ற மாநிலங்களும் பின்பற்றும் என கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா நம்புகிறது. ஆந்திர அரசின் உத்தரவை, தமிழகத்தில் உள்ள ஆலய வழிபடுவோர் சங்கம் வரவேற்றுள்ளது. அதன் நிறுவனர் டி.ஆர்.ரமேஷ், இந்த விஷயத்தில் ஆந்திராவை பின்பற்றி தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mahendran Puru
அக் 12, 2024 14:58

ஒரே கெக்கே பிக்கேதான் போங்க. ஆங்கிலேயரும் திராவிடமும் ஒன்று சேர்ந்தார்கலாம். ஆங்கிலேயனுக்கு அடிவருடிகளாக வாழ்ந்தது அவுங்களப்பா, இப்போது கோயில் சொத்தை அபகரிக்க துடிப்பது அவர்களதானப்பா.


Sathyanarayanan Sathyasekaren
அக் 11, 2024 22:50

தமிழக அரசு இதுபோல செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு தமிழக ஹிந்துக்களுக்கு சொரணை வரவேண்டும், குவார்ட்டர், பிரியாணி, ஈரோடு வெங்காயத்தின் சமூகநீதி மாயையில் இருந்து வெளியே வரவேண்டும். கிருத்துவத்திற்கு மாற்றியபின்னும் ஹிந்து பெயரில் ஒளிந்துகொண்டிருந்த ரெட்டி குடும்பத்தின் கொள்ளைகள், மத மாற்ற வேலைகள் தெரிந்த பின் ஆந்திர ஹிந்துக்கள் விழித்துக்கொண்டு விரட்டி ஆனால் சொரணை இல்லாத தமிழக இந்துக்கள், கோவிலை இடித்தேன் என்று பெருமையாக மேடையில் சொல்லும் பாலுவிற்கும், அசிங்கமான சிலை இருந்தால் அது கோவில் என்று சொன்ன திமாவிற்கும், 2 ஜி கொல்லையன் ராஜாவுக்கும், ஹிந்துக்கள முட்டாளென்று சொன்ன மதுரை வெங்கடேசனுக்கும் வோட்டை போடுகிறார்கள். பிறகு எப்படி கிருத்துவர்கள் போட்ட பிட்சையில் நடக்கும் இந்த திருட்டு திராவிட அரசு பின்பற்றும்? தமிழக ஹிந்துக்களுக்கு சொரணை வந்தால் ஒழிய அதுபோல் இங்கே நடக்க கனவு கூட காண்ணக்கூடாது


இறைவி
அக் 11, 2024 13:07

கண்டு பிடித்து விட்டாரையா திராவிடியா குஞ்சு. நிபுணத்துவம் குறைந்து போச்சாம். கோவிலைச் சேர்ந்த அறங்காவலர்களும் வேத ஆகம அர்ச்சகர்களும் ஒழுங்காகவும் கோவில்களை நிர்வகித்தார்கள். இந்திய கோவில்கள் நிறைய சொத்துக்களும் அதிக பணம் நகை புழங்குள் இடமாக இருந்ததால், ஆங்கிலேயருக்கும் திருட்டு திராவிடியா கழகங்களுக்கும் கை அரிக்க ஆரம்பித்தது. மனிதனுக்கே உண்டான பேராசையும் திருட்டு குணமும் ஒன்றிரண்டு அறங்காவலர் மற்றும் அர்ச்சகர்களுக்கு ஆசையை தூண்ட கை நீடினார்கள். அதையே சாக்கிட்டு ஆங்கிலேயர்களும் திராவிட கழகங்களும் உள்ளே வந்தன. அவர்கள் பிரச்சனை உள்ள கோவிலில் பிரச்சனை தீர்ந்தவுடன் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அம்பாரமாக சம்மணமிட்டு உட்கார்ந்து விட்டார்கள். சனாதனத்தை அழிக்க அர்ச்சகர்களை காலி செய்தால் போதும் என்று அவர்கள் வயிற்றில் அடித்தார்கள். அர்ச்சகர்களும் அறங்காவலர்களும் இடத்தை காலி செய்ய இப்போது கொள்ளை அடிப்பதை கேட்கவே ஆளில்லாமல் போய் விட்டது. இதை சாக்கிட்டு அல்ல கைகளெல்லாம் காசுக்கு கருத்து போடுகிறது.


Barakat Ali
அக் 11, 2024 11:41

நாத்திகம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது ..... நாத்திகம் பேசுவது தண்டனைக்குரிய குற்றம் ..... அதே போல ஹிந்துக்களும் குறைந்த பட்சம் நாத்திகர்களை ஒதுக்க வேண்டும் ...... நாத்திகர்களுக்கு ஆன்மிகம் போற்றும் கோவிலில் அல்லது கோவில் நிர்வாகத்தில் என்ன வேலை ????


ஆரூர் ரங்
அக் 11, 2024 10:39

ஓங்கோல் கட்டுமரக் குடும்பம் சுயநலவாதிகள்..இதில் ஆந்திராவைப் பின்பற்ற மாட்டார்கள். வசூல்பாபுவிடம் விட்டிருப்பது அதற்குதான்.


Sridhar
அக் 11, 2024 10:11

மோடி இப்பவாவது கண்முழித்துக்கொண்டு நாடெங்கும் இதை அமல் செய்யவேண்டும். கோவில்கள் மதசார்பற்ற இடங்கள் அல்ல என்பது திருட்டு கும்பல்கள் அனைவர்களுக்கும் சுருக்கென்று உரைக்கும் வகையில் உரத்த குரல்களில் சொல்லப்படவேண்டிய அவசர செய்தி.


sankaranarayanan
அக் 11, 2024 08:52

எல்லா ஆலய விஷயங்களில் அதிகாரிகள் தலையிடவும் கூடாது. மதம் சார்ந்த இத்தகைய விஷயங்களில் சமய பெரியோர்களின் கருத்துகளை கேட்டு, கோவிலின் அர்ச்சகர்களே முடிவு எடுக்க வேண்டும், என்ற ஆந்திர அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதை தமிழகமும் முழுவதும் பின்பபற்றினாலே போதும் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.


sridhar
அக் 11, 2024 08:32

சந்திரபாபு நாயுடு நேர்மையாக , ஹிந்து பக்தராக இருந்தால் திமுகவும் அப்படி மாறவேண்டும் என்று அவசியம் இல்லை. திமுகவுக்கு நேர்மையும் பிடிக்காது , ஹிந்து. மதமும் பிடிக்காது .


Kasimani Baskaran
அக் 11, 2024 05:57

சில மடாதிபதிகளும், மதத்தலைவர்களும் அர்த்தமில்லாமல் திராவிடர்களுக்கு பயந்துகொண்டு இருக்கிறார்கள். அது மாறினால் திராவிடம் விரைவில் பணியும். இந்துக்கள் ஒன்றுபட்டால் திராவிட அரசியல் எடுபடாது. அதன் பின்னர் மெரினாவில் வரிசையாக அமைந்துள்ள திராவிடக்கல்லறைகளில் தினமும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை கூட செய்வார்கள்.


Bhaskaran
அக் 11, 2024 05:37

அங்கே தேவஸ்வம் ஃபோர்டு நிர்வாகம் இங்கே இருப்பதுஅறக்கொள்ளைத்துறை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை