உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீ விபத்தில் பெண் பலி

தீ விபத்தில் பெண் பலி

நொய்டா:நொய்டாவில் உள்ள இரண்டு மாடி ஜவுளிக் கடையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார். காயம் அடைந்த அவரது கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.நொய்டா 63வது செக்டார், சிஜர்சி கிராமத்தில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.கடையின் முதல் தளத்தில் உள்ள ஓய்வறையில் தூங்கிக் கொண்டிருந்த கடை உரிமையாளர் ரோஹித் சர்மா, அவரது மனைவி வினிதா ஆகியோர் தீயில் சிக்கி காயம் அடைந்தனர்.மீட்கப்பட்ட தம்பதி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, வினிதா மரணம் அடைந்தார். சர்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மின்கசிவால் தீப்பற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை