உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி., என்கவுன்டரில் பெண் மாவோயிஸ்ட் 3 பேர் சுட்டுக்கொலை

ம.பி., என்கவுன்டரில் பெண் மாவோயிஸ்ட் 3 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலகாட்: மத்தியப் பிரதேசத்தில் நடந்த என்கவுன்டரில் பெண் மாவோயிஸ்ட்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கர் எல்லைக்கு அருகிலுள்ள ம.பி., வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் மாநில காவல்துறையின் மாவோயிஸ்ட் எதிர்ப்பு ஹாக் படை மற்றும் உள்ளூர் போலீஸ் குழுக்கள் பங்கேற்றதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய் தபார் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 90 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு இடத்தில் காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது. சுப்கார் வனப்பகுதியில் உள்ள ரோண்டா வன முகாம் அருகே இந்த சம்பவம் நடந்தது. இதில், பெண் மாவோயிஸ்ட்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் தப்பி விட்டனர்.சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், செல்ப்-லோடிங் ரைபிள் மற்றும் ஒரு .303 ரைபிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். தப்பியவர்களைக் கண்டுபிடிக்க பன்னிரண்டு போலீஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

முதல்வர் பாராட்டு

மாவோயிஸ்டுகளை வீழ்த்திய மாநில போலீஸ் படையினருக்கு முதல்வர் மோகன் யாதவ் பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

c.mohanraj raj
பிப் 20, 2025 14:16

அனைத்து இயக்கத்திற்கும் அடிப்படையாக ஒரு கட்சி இருக்கும் ஏன் இந்த மாவோயிஷ்டைகளுக்கு அடிப்படையாக கம்யூனிஸ்ட் இருப்பது தெரிவதில்லை யாரும் இதைப் பற்றி பேசுவதும் இல்லையே.


MARUTHU PANDIAR
பிப் 19, 2025 22:35

ஆணாவது பெண்ணாவது ,இந்த காட்டேரி ஜென்மங்களுக்கு. சுட்டுக் தள்ள வேண்டியது தான்..பொது சொத்தும், பொது மக்கள் உயிரும் பாதுகாப்பும் மட்டுமே முக்கியம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை