உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; பிரமாணப்பத்திரத்தை வாபஸ் பெற கேரள அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; பிரமாணப்பத்திரத்தை வாபஸ் பெற கேரள அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பந்தளம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் பிரமாணப்பத்திரத்தை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.அவரது எக்ஸ் தளப்பதிவு; கேரள மாநிலம் பந்தளத்தில் நடந்த சபரிமலை சமரக்ஷண சங்கமத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இது பிரம்மச்சாரியான ஐயப்பனின் புனிதத்தைக் காக்கும் ஒரு தெய்வீக நிகழ்ச்சி. கம்யூனிஸ்டுகள் மற்றும் அவர்களின் கூட்டணியான திமுகவும், தேர்தல் சமயத்தில் நடத்தும் அரசியல் நாடகத்தால், லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடக் கூடாது. சனாதன தர்மத்தைப் பாதுகாக்க ஒரு தீர்மானமான அரசியல் மாற்றத்திற்கான நேரம் தான் இது.உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பிரமாணப்பத்திரத்தை முதல்வர் பினராயி விஜயன் திரும்பப் பெற வேண்டும். அதேவேளையில், 2018-19ல் சபரிமலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்காக பக்தர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kannan
அக் 24, 2025 09:57

நானும் ஒருத்தன் இருக்கேன் ன்னு அப்போ அப்போ காமெடிய பண்ணுறார். நல்ல time pass


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
அக் 22, 2025 16:27

2016 வரை ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் சபரிமலையில் அனைத்து பெண்களும் சென்று வழிபடுவதை ஆதரித்து எழுதி வந்தது. பின்னர் அதன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டது. மகாராஷ்டிரத்தில் சனி சிக்னாபூர் கோவில் ஒன்றுக்கு பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்ததை மாற்றி அனைத்து பெண்களும் அனுமதித்ததை ஆர்எஸ்எஸ் வரவேற்றது. முன்பு காஞ்சி மடாதிபதி அவர்களுக்கு சீனா அரசு அழைப்பு விடுத்தது துறவிகள் மடாதிபதிகள் கடல் கடக்க கூடாது என்ற மரபை ஒட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது அப்பொழுது விஸ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர் இதுபோன்ற காலத்திற்கு ஒவ்வாத விதிகளை மாற்ற வேண்டும் என்று சொன்னார் அவர்களுக்கு அரசியல் லாபம் கொடுக்கும் வகையில் இரட்டை நிலைப்பாடு எடுப்பதில் திறமை படைத்தவர்கள். இதற்கு ஏற்ப பல்வேறு அமைப்புகளை வைத்திருப்பார்கள்.


S.jayaram
செப் 23, 2025 20:36

நல்ல கோரிக்கை அத்துடன் இந்துக்களை ஏமாற்றும் நபர்களுக்கு செக்


Sumathi Srivilliputhur
செப் 23, 2025 20:08

அப்டி ல ila


Vasoodhevun KK
செப் 23, 2025 19:52

200 க்கு மேலும் கிடைக்கும் .


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 23, 2025 12:24

அனைத்து மசூதிகளிலும் முதலில் பெண்களுக்கு ஆண்களுக்கு சமமாக ஒரே நுழைவாயில், ஒரே வழிப்பாடு தளத்தில் வழிபட கேரள அரசு அனுமதி கொடுத்து விட்டு, பிறகு ஐயப்பன் கோவில் விசயத்தில் தலையிட வேண்டும். இல்லையேல் வாய் யை மூடி கொண்டு இருக்க வேண்டும்


SULLAN
செப் 24, 2025 07:38

அப்பொடியா??


venugopal s
செப் 23, 2025 11:02

அண்ணாமலையின் ஆல் இந்தியா அரசியல்வாதியாக ஆகும் முயற்சி இது! இங்கேயே இவரை யாரும் சீந்துவதில்லை!


R.Madhuri Devi 18RBCO024
செப் 23, 2025 08:36

தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் பெண்களுக்கு அனுமதி என்ற பெயரில் கோவிலை மூட பார்க்கிறார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 23, 2025 07:51

அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும்


SULLAN
செப் 24, 2025 07:36

சபரி மலையிலுமா??


Shiva
செப் 23, 2025 07:21

In turn better pray for an appeal in the Apex court to reverse Justice Deepak Misra's earlier verdict in this aspect.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை