உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மல்யுத்த கூட்டமைப்பில் பெண்கள் பங்கு அதிகரிக்க வேண்டும்: சாக்ஷி மாலிக் விருப்பம்

மல்யுத்த கூட்டமைப்பில் பெண்கள் பங்கு அதிகரிக்க வேண்டும்: சாக்ஷி மாலிக் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மல்யுத்த கூட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: பெண்கள் பங்களிப்பு அதிகரிப்பது இளம் மல்யுத்த வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மல்யுத்த கூட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். ஓராண்டாக நான் மனது மற்றும் உடலளவில் சோர்வாக இருந்ததால் கூட்டமைப்பில் சேர்வது பற்றி நினைக்கவில்லை. சஞ்சய் சிங்குடன் மட்டுமே எங்களுக்கு பிரச்னை இருந்தது. புதிய கூட்டமைப்பு அமைப்பு அல்லது தற்காலிக குழுவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சஞ்சய் சிங்கிற்கு மல்யுத்த சம்மேளனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பிரிஜ் பூஷன் என் குடும்பத்தை குறிவைக்கிறார். எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

K.Ramakrishnan
ஜன 03, 2024 22:07

எதுக்குங்க..உங்களுக்கு ஏற்பட்ட கதி மற்ற பெண்களுக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? அந்த கட்சியில் மாஜி பெண் எம்.பி.யிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் ஒரு விஐபி... அதுக்கு வீடியோ ஆதாரமே இருக்கு.... அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தாங்க...?


ஆரூர் ரங்
ஜன 03, 2024 21:07

முன்பு பாபி ஃபிஷர் என்ற அமெரிக்க செஸ் வீரர்,தான் ஆடினால் நேரடியாக பைனலில் மட்டுமே ஆடுவேன். மற்றவர்கள் போல கீழ் சுற்றுக்களில் ஜூனியர் வீரர்களுடன் ஆடி ஜெயித்து பைனலுக்கு அதன் மூலம் வரமாட்டேன் என நிபந்தனை போட்டாராம். ????. இப்போ அவருக்கு நம்மூரு மல்யுத்த சீடர்களும் இருக்கிறார்களே.


விடியல்
ஜன 03, 2024 17:03

கூப்பிட்டு பதவி கொடுக்க வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன மனநிலை.. தேர்தலில் போட்டியிட்டு வென்று வந்திருக்கலாம். குறிப்பிட்ட அந்த முன்னாள் தலைவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது நிரூபிக்க வேண்டிய ஆதாரங்கள் சாட்சிகள் கொடுத்து இருக்கலாமே. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஒட்டுமொத்த சங்கத்தினர் ஒழிக்க என்ன காரணம் என்று சொல்லலாமே


சாந்தகுமாரி,சிங்கம்புணரி
ஜன 03, 2024 16:44

மெடலை மட்டும் திருப்பித் தந்தால் போதுமானது அல்ல உனக்கு கிடைத்த பரிசுத் தொகை ஒரு கோடியே ஐம்பத்து ஐந்து லட்சத்தையும் உனக்கு மத்திய அரசு கொடுத்த இரயில்வே வேலையையும் உனக்கு அலாட் பண்ணிய சொகுசு பங்களாவையும் திருப்பி கொடுத்துட்டு உங்க போராட்டத்தை ஆரம்பிக்கலாம்


ஆரூர் ரங்
ஜன 03, 2024 16:36

நடிப்புத்திறமை அதிகமிருந்தால். மல்யுத்தததுக்கு பதில் அந்தத் துறையில் கவனம் செலுத்தலாம்.


Duruvesan
ஜன 03, 2024 16:32

MP சீட் காங்கிரஸ் குடுத்துடுவாங்களா?


சந்திரன்,போத்தனூர்
ஜன 03, 2024 15:59

உன் விருப்பம் ஒரு பக்கம் இருக்கட்டும் நீ திருப்பி கொடுத்த மெடல்களோடு உனக்கு கிடைத்த கோடிக் கணக்கான ரூபாயையும் உனக்கு மத்திய அரசு கொடுத்த வீட்டையும் திருப்பி கொடுத்து விட்டு ....


வெகுளி
ஜன 03, 2024 15:45

நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை....


Anand
ஜன 03, 2024 15:43

ரவுல் வின்சி பேச்சை கேட்டால் கூறுகெட்டு போவது தான் மிச்சம்....


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை