உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மியில் மல்யுத்த வீரர்கள்

ஆம் ஆத்மியில் மல்யுத்த வீரர்கள்

புதுடில்லி:மல்யுத்த வீரர்கள் மற்றும் பாடி பில்டர்கள் உட்பட பல விளையாட்டு வீரர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தனர்.மல்யுத்தம் மற்றும் பாடி பில்டர்களான திலக்ராஜ், ரோஹித் தலால் மற்றும் அக்ஷய் திலாவரி உட்பட 80 விளையாட்டு வீரர்கள், ஆம் ஆத்மி கட்சியில் நேற்று சேர்ந்தனர். அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அவர்களை வரவேற்று கட்சி தொப்பி மற்றும் சால்வை அணிவித்தார்.அப்போது பேசிய கெஜ்ரிவால்,“வரும் தேர்தலில் தலைநகர் டில்லியில் ஆட்சியைத் தக்கவைத்த பின், விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தீர்க்கப்படும். மேலும் பல உடற்பயிற்சி மைய உரிமையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆம் ஆத்மியில் விரைவில் இணைகின்றனர்,”என்றார்.இலவச யோகா வகுப்புகள் மற்றும் விளையாட்டுத் துறைக்கு அரசின் ஆதரவு ஆகியவற்றை பாராட்டிய ரோஹித் தலால், “ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகளே என்னைக் கட்சியில் சேர தூண்டியது. ஆம் ஆத்மியுடன் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்புகிறேன்,” என்றார்.“விளையாட்டு வீரர்கள் கடினமாக உழைத்து ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்,” என, திலக்ராஜ் கூறினார். சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை