உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா நர்சுக்கு மரண தண்டனை அளிக்க ஏமன் அதிபர் ஒப்புதல்; காப்பாற்ற இந்தியா தீவிர முயற்சி

கேரளா நர்சுக்கு மரண தண்டனை அளிக்க ஏமன் அதிபர் ஒப்புதல்; காப்பாற்ற இந்தியா தீவிர முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி உத்தரவிட்டுள்ளார். இதற்கு, 'பிரியாவின் குடும்பத்தினர் கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அரசு முடிந்த அளவு முயற்சி செய்யும்' என இந்தியா பதில் அளித்துள்ளது.கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=09v8px6e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியாவின் தாய் மகளை மீட்க போராடி வருகிறார். ஏமன் நாட்டு சட்டப்படி ( இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரியாவின் குடும்பத்தினரின் கவலை என்ன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தில் அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ஆரூர் ரங்
டிச 31, 2024 22:14

ஏமந்நாட்டில் மக்கள் தொகையை விட கள்ளத் துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் (சாரி துப்பாக்கி எடுத்தவன்). குறிப்பிட்ட இன முஸ்லிம் மக்களே கூட தீண்டாமைக்குள்ளாகியுள்ளார்கள். முரடர்கள் நிறைந்த அந்த நாட்டுக்கு இந்தியர்கள் வேலைக்கு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும்.


Haja Kuthubdeen
ஜன 01, 2025 09:49

இந்த செய்திக்கும் உங்கள் கருத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா???


venugopal s
டிச 31, 2024 21:34

மத்திய பாஜக அரசு தமிழக மீனவர்களை இலங்கை அரசிடம் இருந்து காப்பாற்றியது (?) போல் இவரையும் காப்பாற்றி விடுவார்கள்!


Velayutham rajeswaran
ஜன 01, 2025 19:54

200 உபி இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை தண்டனையிலிருந்து மீட்டது மோடி தலைமையிலான மத்திய அரசு தான் திராவிட மாடலுக்கு முட்டு கொடுப்பதை விட உலக நடப்புகளை புரிந்து கொள்ள வேண்டும்


தமிழ்வேள்
டிச 31, 2024 20:28

வன்புணர்வு புனிதம்..தன் கற்பைக் காக்க கொலை செய்தால் அது குற்றமா?


Seekayyes
டிச 31, 2024 22:30

சார், சும்மா மேட்டர் தெரியாம கமெண்ட் போடாதிங்க சார். தான் சுய தொழில் செய்ய ஒரு அரபுகாரனுக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டவள் இவள். அரபுகாரன் எப்படி என்று தெரிந்துதானே திருமணம் செய்து கொண்டால், அப்புறம் அவன் வன்புணர்வு செய்தான், அதனால் கொன்றேன் என்ற சால்ஜாப்பு எல்லாம் அரபு நாடுகளில் செல்லுப்படி ஆகாது சார். இது ஒரு பாடமாக இருக்கட்டும் இந்தியர்களுக்கு.


தமிழன்
டிச 31, 2024 18:28

தவறு இருக்கும் பட்சத்தில் தண்டனை நியாயமானதுதான் . தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்


Senthoora
ஜன 01, 2025 04:20

உண்மையான தவறு எங்கே ன்று உங்களுக்கு தெரியவில்லை? அந்த நாட்டில் எப்படி கொலையானாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் சட்டம் சார்பாக இருக்கும்.


Kumar Kumzi
டிச 31, 2024 17:34

ஏமன் ஒரு பிச்சைக்கார நாடு அங்க ஏன் வேலைக்கு போனீங்க


V வைகுண்டேஸ்வரன்
டிச 31, 2024 17:28

இஸ்லாமியர் ஒருவரை இந்துப் பெண்மணி கொலை செய்ய உடந்தை. இதனால் தான் பாஜக வாசகர்கள் ஒரே ஓட்டம் எடுத்து விட்டார்கள்.


பெரிய ராசு
டிச 31, 2024 20:24

அவள் ஒரு கிருத்துவர்


rama adhavan
டிச 31, 2024 21:51

பாஸ்போர்ட் நகல் பத்திரிகையில் வெளி வந்து இருந்தது. புகைப்படத்தில் அந்த பெண்ணின் தந்தை பெயர் இந்து போல் இல்லை. எனவே இந்து இல்லை என எண்ண தோன்றுகிறது.


visu
டிச 31, 2024 22:13

முட் டாள் தனமான கருத்து முழு கதையை படித்து பார்க்கவும் அந்த பெண்ணின் தவறு இது போன்ற நாட்டில் வேலைக்கு சென்றது அவர் ஒரு கிறித்துவர் அவர்கள் நாட்டு சட்டம் ஒரு சார்பாக உள்ளது விசாரணை முறையும் சரி இல்லை


Matt P
டிச 31, 2024 23:17

கொலை செய்யப்பட்டவர் இஸ்லாமியர் என்கிறார்.


Senthoora
ஜன 01, 2025 04:24

விபரம் தெரியாமல் கருது எழுதும் உங்களிடம் இருந்து தெரிகிறது, வன்முறை எங்கே ஆரம்பிக்குது என்று.


V வைகுண்டேஸ்வரன்
டிச 31, 2024 17:00

இங்கே ஓர் இந்து ப் பெண்மணி தான் கொலையாளி. Could they tell something on this?? Everybody ran away. Haa haa haa haa ??????


Indian
டிச 31, 2024 21:42

முட்டாளா நீ..


பெரிய ராசு
ஜன 01, 2025 11:15

ரொம்ப ஆசைப்பட்ட நீ போ ஏமனுக்கு போயி காப்பது ..வாயே இளிக்கிற முட்டாளே


MARI KUMAR
டிச 31, 2024 15:57

கேரளா நர்சிக்கு மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாது


கல்யாணராமன்
டிச 31, 2024 15:53

கொலைகாரிக்கு மரண தண்டனை சரியே. இதில் எல்லாம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தண்டனையை நிறைவேற்றி சட்டத்தின் மாண்பை நிலைநாட்ட வேண்டும்.


Barakat Ali
டிச 31, 2024 15:38

இவங்களுக்கு குரல் கொடுத்தா தமிழகத்தில் குப்பை போடமாட்டார்களா மலையாளிகள் ??


சமீபத்திய செய்தி