உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது: மக்களுடன் இணைந்து யோகா செய்த பின் மோடி பேச்சு

யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது: மக்களுடன் இணைந்து யோகா செய்த பின் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ''யோகா உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது'' என மக்களுடன் இணைந்து யோகா செய்த பின் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப் படுகிறது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்.கே.கடற்கரையில் மக்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகா செய்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி. உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. யோகா ஒட்டுமொத்த உலகத்தையும் ஒன்றிணைப்பதை பார்க்கையில் ஆச்சரியம் அளிக்கிறது. நாம் தனி மனிதர்கள் மட்டுமல்ல. இயற்கையின் அங்கம். இதனை யோகா நினைவுபடுத்துகிறது.

உடல் ஆரோக்கியம்

உலக மக்களின் அன்றாட அங்கமாக யோகா மாறி உள்ளது. யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது. மிகப்பெரிய மருத்துவ நிறுவனங்கள் கூட யோகா குறித்து தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறது. யோகா உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. யோகா குறித்து நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தது.

உடல் பருமன்

மன்கி பாத் நிகழ்ச்சியில் கூட உடல் பருமன் குறித்து பேசி உள்ளேன். எண்ணெய் பயன்பாடுகளை குறைக்க அறிவுறுத்தியுள்ளேன். யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மனதை சமாதானப்படுத்த யோகா உதவுகிறது. மீண்டும் ஒருமுறை ஆந்திரா மக்களுக்கும், யோகாவை மேற்கொள்வதற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஜூன் 21, 2025 21:23

ஃப்ரெண்ட் புட்டின்,ட்ரம்ப், ஜிங் ஜிங், நெதஞாஹூவுக்கு யோகா சொல்லித்தரலாமே.


அப்பாவி
ஜூன் 21, 2025 18:28

எத்தனை நாடுகளில் அமைதி இருக்கு?


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 21, 2025 10:36

மோடிஜி தொடக்கி வைத்த யோகா திட்டம், உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது, வாழ்க வளர்க


venugopal s
ஜூன் 21, 2025 10:22

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வச்சான் மேடையிலே என்ற எம் ஜி ஆர் படப்பாடல் ஞாபகம் வருகிறது!


Iyer
ஜூன் 21, 2025 09:05

மோதிஜி நாடு முழுவதும் பாடத்திட்டங்களை யோகா பிராணாயாமம் தியானம் போன்ற விஷயங்களை கட்டாயம் ஆக்குங்கள்


புரொடஸ்டர்
ஜூன் 21, 2025 08:53

யோகாவுக்கும் உலக அமைதிக்கும் என்ன தொடர்பு நரேந்திரமோடிஜி?


Kumar Kumzi
ஜூன் 21, 2025 10:27

நீ ஒரு பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா மூர்க்கன் என்று தெளிவாக தெரிகிறது


Kasimani Baskaran
ஜூன் 21, 2025 08:51

ஒவ்வொரு ஊருக்கும் தினமும் பயிற்சி கொடுக்குமளவுக்கு நாலுபேரை நியமித்து தொடர்ந்து பயிற்சி செய்ய வைத்தால் எழுச்சி மிக்க சமுதாயம் உருவாகும்.


SUBBU,MADURAI
ஜூன் 21, 2025 07:48

Jai Shri Ram echoes on the shores of Visakhapatnam On International Yoga Day, PM Narendra Modi will lead a grand yoga session here Over 3 lakh people will perform yoga together along a 26-km coastal corridor from RK Beach aiming for a WORLD RECORD!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை