உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் ரயில் முன்பதிவு டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்

ஆன்லைன் ரயில் முன்பதிவு டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்

புதுடில்லி : அடுத்த ஆண்டு ஜனவரி முதல், 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்து உறுதியான ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யாமல் வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 'ஆன்லைன்' மூலம் செய்யப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவில் தற்போது, பயணத் தேதியை மாற்ற விரும்பும் பயணியர், டிக்கெட்டை ரத்து செய்து புதிதாக மீண்டும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8z4stya2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரத்து செய்யும் போது அதற்கான கட்டணம் பிடிக்கப்பட்டு, பயணியருக்கு கூடுதல் செலவும் சிரமமும் ஏற்படுகிறது. இந்த முறையில் மாற்றம் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வந்த நிலையில், அதற்கான புதிய திட்டத்தை வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது. இந்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று உறுதி செய்தார். 'வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். வேறு கூடுதல் கட்டணங்கள் கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

p karuppaiah
அக் 08, 2025 08:59

மிகவும் வரவேற்கத்தக்கது பாராட்டுக்கள்


Ramesh Sargam
அக் 08, 2025 08:56

வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே, அதாவது availability இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். இதுதான் பயணியர்களுக்கு வைக்கும் செக்மேட்... இதை நான் எதிர்பார்த்தேன். பரவாயில்லை. முற்றிலும் பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்து, மீண்டும் புக் பண்ணவேண்டிய அவசியம் இல்லை.


D Natarajan
அக் 08, 2025 08:03

தேவையான திட்டம். நல்ல வரவேற்பை பெரும்.


rama adhavan
அக் 08, 2025 04:12

நல்ல பயனுள்ள திட்டம்.


Raghavachari Srinivasan
அக் 08, 2025 09:17

Already available for counter bookings Not available for online booking


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை