உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இங்கிலாந்தை துவம்சம் செய்த இளம் இந்தியா; அபிஷேக் ஷர்மா சரவெடி

இங்கிலாந்தை துவம்சம் செய்த இளம் இந்தியா; அபிஷேக் ஷர்மா சரவெடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் பட்லரை (68 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 133 ரன்னுடன் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. சஞ்சு சாம்சன் 26 ரன் குவித்தார். மறு முனையில் அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 12.5 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்முலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M. PALANIAPPAN
ஜன 23, 2025 10:12

எட்டு சிக்ஸர் அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக, சூப்பர் அபிஷேக் சர்மா


M. PALANIAPPAN
ஜன 23, 2025 10:10

நல்ல மேட்ச் ஆக இருந்தது, இந்தியா அணியில் விளையாடிய அனைத்து இளம் வீரர்களும் மிகவும் ஆத்மார்த்ததுடன் விளையாடினார்கள். ஒரு கேட்ச் போலும் மிஸ் செய்யவில்லை fielding அற்புதம், நிதிஷ் அண்ட் ரிங்கு எடுத்த கேட்ச் இரண்டும் அருமை மொத்தத்தில் இளம் இந்தியா பேட்டிங், பௌலிங் அண்ட் fielding மூன்றிலும் பிரகாசித்தது , இதுபோல் மேலும் பல வெற்றிகளை பெற நல் வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை