உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளம்பெண் வீடியோக்களை வெளியிட்ட வாலிபர் கைது

இளம்பெண் வீடியோக்களை வெளியிட்ட வாலிபர் கைது

ஆனந்த் பர்பத்: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி டில்லி பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய உத்தர பிரதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர். டில்லியை சேர்ந்த 24 வயது இளம்பெண், சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரில், 'திருமணம் செய்து கொள்வதாகக்கூறி உத்தர பிரதேசத்தின் படாவுனை சேர்ந்த எம்.டி.சோஹில், 26, என்னுடன் நெருக்கமாக இருந்தார். அதை வீடியோவில் பதிவு செய்த அவர், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். என்னுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்' என கூறியிருந்தார். ஆனந்த் பர்பத் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோஹிலை கைது செய்தனர். இதேபோன்று வேறு ஏதேனும் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை