வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இங்க ஒருத்தர் இருக்காரு, நல்ல கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பாரு. அவருகிட்ட அனுப்பி விடுங்க. அவனே பிச்சிகிட்டு ஓடிருவான்.
சிலா நிறங்களில் சிலா பைத்யங்கள்
பயித்தியம்
இது தான் கட்டிப்பிடி வைத்தியமோ ?
பெங்களூரு: கர்நாடகாவின், பெங்களூரில் சில மாதங்களுக்கு முன், நள்ளிரவில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை, பின்னால் இருந்து வந்த வாலிபர் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு தப்பியோடினார். தலைமறைவாக இருந்த அந்நபரை போலீசார் கைது செய்தனர்.அதுபோன்ற சம்பவம், மீண்டும் பெங்களூரில் நடந்துள்ளது. விவேகானந்தா நகரை சேர்ந்தவர் அபர்ணா ரதுாரி, 28. கடந்த 6ம் தேதி காக்ஸ்டவுன் மில்டன் பூங்கா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவ்வழியாக வந்த வாலிபர், அபர்ணா ரதுாரியை கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டார். அந்நபர், தன்னை மப்டியில் இருக்கும் போலீஸ் என்று கூறியுள்ளார்.பின், மில்டன் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த லிபா டிசோசா, 42, என்ற பெண்ணையும் கட்டிப் பிடித்து, உதட்டில் முத்தம் கொடுத்து விட்டு தப்பினார்.அதிர்ச்சி அடைந்த இரு பெண்களும், புலிகேசி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பெங்களூரைச் சேர்ந்த மதன், 37, என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
இங்க ஒருத்தர் இருக்காரு, நல்ல கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பாரு. அவருகிட்ட அனுப்பி விடுங்க. அவனே பிச்சிகிட்டு ஓடிருவான்.
சிலா நிறங்களில் சிலா பைத்யங்கள்
பயித்தியம்
இது தான் கட்டிப்பிடி வைத்தியமோ ?