உள்ளூர் செய்திகள்

பேக்கேஜிங் துறை வளர்கிறது

டில்லியில் உள்ள மேக்னிபிஷியன்ஸ் அகாடமி ஆப் பேக்கேஜிங், இந்த துறையில் புதிய படிப்புகளை வழங்கி வருகிறது. ஆறுமாத புரபஷனல் பேக்கேஜிங் கோர்ஸ் மற்றும் 10 நாள் பெர்சனல் பேக்கேஜிங் கோர்ஸ் ஆகிய இரண்டு படிப்புகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. மார்க்கெட்டிங் தொழில்நுட்பம், பேக்கேஜிங் தொழில்நுட்பம், பொருட்களை பெறும் முறை, பேக்கேஜிங்கில் புதிய உத்திகள் குறித்து இதில் கற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள் தொழில்நுட்ப அறிவையும், துறை சார்ந்த பயிற்சியையும் இந்த படிப்பின் மூலம் பெறுகின்றனர். கடைநிலை பயனாளிகளிடம் பேக்கேஜிங் மூலம் பொருட்களை கொண்டு சேர்த்து, விற்பது பற்றி மாணவர்கள் இதில் அறிந்து கொள்ள முடியும். பேக்கேஜிங் துறை தற்போது தொடக்க நிலையில் இருப்பதால், இதில் வளர்ச்சிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்த படிப்புகளை நிறைவு செய்த பின்னர் மாணவர்கள் சொந்தமாக பேக்கேஜிங் நிறுவனங்களை தொடங்க முடியும். சொந்தமாக கல்வி நிறுவனங்களையோ, பகுதி நேர படிப்புகளையோ கூட வழங்க முடியும். ஈவென்ட் மேனேஜ்மென்ட், சிறப்பு நாட்கள் திட்டமிடல், அழைப்பிதழ் வடிவமைப்பு போன்ற துறைகளிலும் சாதிக்க முடியும். புதிய பொருட்களை அறிமுகம் செய்யும் போதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் பரிசளிப்பு விழாக்களின் போதும் பேக்கேஜிங் நிபுணர்களுக்கான தேவை அதிகம். இந்த படிப்புகளில் சேர 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆறு மாத படிப்புக்கு கட்டணமாக 60 ஆயிரம் ரூபாயும், 10 நாள் படிப்புக்கு கட்டணமாக 11 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !