சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள்
கல்லூரியின் தரம், ஆசிரியர்களின் அனுபவம், திறன், வேலைவாய்ப்பு, உலகளவில் கல்லூரியின் மதிப்பு, கல்லூரியின் உள்கட்டமைப்பு, வசதிகள், அங்கு படித்த மாணவர்களின் தரம் ஆகியவை சர்வேயின் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ஆமதாபாத் ஐ.ஐ.எம்., முதலிடத்தை பெற்றுள்ளது. பெங்களூரு, கோல்கட்டா ஐ.ஐ.எம்.,கள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்தன. முதல் 10 இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்கள். 1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், ஆமதாபாத்,2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், பெங்களூரு,3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், கோல்கட்டா,4. இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ், ஐதராபாத்,5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், லக்னோ,6. ஜேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட், ஜாம்ஷெட்பூர்,7. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், இந்தூர்,8. பேகல்டி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், டில்லி,9. டிபார்ட்மென்ட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், ஐ.ஐ.டி., டில்லி,10. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு, டில்லி.இதில் தமிழகத்தின் லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட், சென்னை நிறுவனத்துக்கு 14வது இடம் கிடைத்துள்ளது.