உள்ளூர் செய்திகள்

ஆஸ்திரேலிய வேலைக்கு என்ன திறன் தேவை?

இதில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய விசா தரப்படுவதற்கு 2 மாதங்கள் வரை தற்போது ஆகிறது. மேலும் தற்போது விசா வழங்குவதற்கு முன் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரையும் நேர்காணலுக்கு ஆஸ்திரேலிய தூதரகம் நிர்ப்பந்தித்து வருகிது.தற்போது ஆஸ்திரேலிய அரசு இந்திய மாணவர்களை அதிகமாக ஈர்க்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்பாக எல்லாம் ஆஸ்திரேலியா என்றாலே எம்.பி.ஏ., மற்றும் பியூட்டிசியன் படிப்பு தான் நினைவுக்கு வந்தன. பிரபலமான ஒரு ஆஸ்திரேலிய கல்வி நிறுவனத்தில் இந்தப் படிப்புகளைப் படிப்பது பலரின் கனவாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இவற்றை முடித்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவிலேயே வேலையைப் பெறுவதற்கு சிரமங்கள் உள்ளன. இதனிடையே தொழில் சார்ந்த படிப்புகளான பெயிண்டிங், கார்ப்பெண்டரி, கொத்தனார், பிளம்பிங், எலக்ட்ரீசியன் போன்ற துறைகளில் முறையான பயிற்சியைப் பெற்றவருக்கு ஆஸ்திரேலியாவில் தேவை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரிவுகளில் 2 ஆண்டுப் படிப்பை முடித்தால் உடனே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடுகிறது. காலப் போக்கில் சில படிப்புகளுக்கு தேவை அதிகரிக்கும் என்பதில் தற்போது எம்.பி.ஏ.,வை விட தொழில் சார்ந்த படிப்புகளுக்கு கிராக்கி அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய வேலை குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !