விமானப் பணிப் பெண்
வித விதமான நாடுகளுக்கு பயணம் செய்யும் அனுபவத்தை அளிக்கக்கூடிய இந்த துறையில் வேலைவாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. மேலும் ஊதியமும் நிறைவாக கிடைப்பதால் இந்தப் படிப்புக்கு போட்டி அதிகமாகத்தான் இருக்கிறது. குறிப்பிடப்பட்ட தகுதிகள் இருந்தால் மட்டுமே இந்த படிப்பு படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். பிரபலமாகி வரும் இந்த படிப்பை பற்றி கல்வி நிறுவனங்கள் தற்போது அதிகரித்து வருகின்றது. தற்போதைய காலகட்டத்தில் விமான சேவை அதிகரித்துக்கொண்டே போவதால் இந்த துறையில் பயில்பவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பணியின் அம்சம் விமானப் பணிப் பெண் வேலையின் முதன்மை அம்சம் பயணிகளின் பாதுகாப்பு. விமானத்தில் பயணம் செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பயணிகளுக்கு எடுத்துரைத்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வழிநடத்த வேண்டியது அவர்களின் முதன்மை பணியாக கருதப்படுகிறது. மொத்தத்தில் பயணிகள் எந்த வித கஷ்டமும் இல்லாமல், வசதியான பயணத்தை மேற்கொள்ளச் செய்ய வேண்டியது விமானப் பணிப் பெண்களின் கடமை. முதலில் பயணிகளை வரவேற்று, விமானம் பற்றிய முக்கிய தகவல்களையும், அவசர காலத்தில் செய்ய வேண்டியவற்றையும் விவரிக்க வேண்டும். பயணிகளுக்கு தேவையான உணவு, தேவையான பொருட்களை வழங்க வேண்டும். வயதான, உடல் நலம் குன்றியவர்கள் பயணம் செய்யும் போது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். எந்த நிலையிலும் கோபப்படமால், அமைதியாகவும், கனிவாகவும் பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டும். அவசர காலத்தில்பயணிகளின் நலனிற்கு விமானப்பணிப் பெண்களே பொறுப்பு. தகுதிகள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிறப்பான தோற்றமும், நல்ல கண் பார்வையும் முக்கியம்.சர்வதேச ஆங்கில மொழித்திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இதற்கான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. விமானப் பணிப் பெண் பற்றிய ஒரு வருட டிப்ளமோ படிப்பில் சேருவதற்கு உரிய தகுதிகளுடன், அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். கல்வி நிறுவனங்கள் பிராங்க்பின் ஏர்ஹோஸ்டஸ் டிரெய்னிங் அகாடமி www.frankfinn.com ஏவலான் அகாடமி பார் ஏவியேஷன் www.avalonacademy.in ஏ.ஹெச்.ஏ., ஏர்ஹோஸ்டஸ் அகாடமி www.airhostessacademy.com ஊதியம் புதிதாக பணியில் சேருபவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. தலைமை விமானப் பணிப் பெண்களுக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது. சர்வதேச தலைமை விமான பணிப்பெண்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.