2010 புதிய வேலைகளும் வேலை இழப்புகளும்
இதனால் இந்திய ஐ.டி., துறையில் புதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் போனதை அறிவோம். இந்த நிலை 2010ம் ஆண்டில் கணிசமாக மாறி புதிய வேலை வாய்ப்புகள் என்பது நமது சந்தைத் தேவையைப் பொறுத்து அமையவிருப்பதாக வேலை ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான ஆரோக்கியமான குறியீடுகள் ஏற்கனவே இந்திய பொருளாதாரத்தில் காணத் துவங்கியுள்ளன. புதிய வேலைகள் தொடர்பான குறியீடுகளில் அக்டோபர்டிசம்பர் 2009க்கான காலாண்டில் 50 சதவீத வளர்ச்சி அடையப்பட்டது. இது ஜனவரியில் மட்டுமே 20 சதவீதமாக காணப்படுகிறது. 2010ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் நாம் காணவிருக்கும் உற்சாகமான புதிய வேலை வாய்ப்புகளுக்கு இது ஒரு முன்னோடி என்று வேலை ஆலோசகர்கள் கருதுகின்றனர். 2008ம் ஆண்டின் லேமென் சரிவிற்குப் பின் தற்போது தான் உலகப் பொருளாதாரம் மேம்படத் துவங்கியுள்ளது. இந்திய வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை தற்போது காணப்படும் நம் பிக்கைக்கு உலகப் பொருளாதாரம் காரணமல்ல. இந்திய சந்தை வளர்ச்சியடைவதால் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. டெலிகாம், உற்பத்தி, எப்.எம்.சி.ஜி., ரீடெயில், பி.எப்.எஸ்.ஐ., ஐ.டி., மற்றும் அரசுத் துறைகளில் இந்த ஆண்டு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளன என்று டீம்லீஸ் டேலன்ட் மேனேஜ்மென்ட் என்னும் மனித வள ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இதன் மறுபக்கம் என்பதும் இருக்கத்தான் செய்கிறது. ஏவியேஷன், ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறைகள் வேலை இழப்புகளையும் சந்திக்கவிருக்கிறது. லே ஆப், பிங்க் ஸ்லிப், ரைட் சைஸிங் போன்ற வார்த்தைகளை 2009ம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தின. இவை வேலைக் குறைப்பையும், ஆட்கள் குறைப்பையும் குறிக்கும் பல்வேறு வார்த்தைகள். எனினும் 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் பொருளாதாரம் மீட்சி அடையத் துவங்கியது. இதனால் அந்த ஆண்டின் 2ம் பாதியில் மத்தியஅரசின் பொருளாதார மீட்பு முயற்சிகளின் விளைவாக புதிதாக 50 ஆயிரம் பணி வாய்ப்புகள் உருவாகின. பொது நிர்வாகம், கல்வி, சுரங்கம், கட்டுமானம், நிதி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட், மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் போன்ற துறைகளில் எண்ணற்ற வாய்ப்புகளை 2010ம் ஆண்டில் எதிர்பார்க்கலாம் என மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்த ஆண்டில் நிறுவனங்கள் வளருவதும் துறை வளருவதும் கணிசமாகமேம்படும் என்பதால் தற்போதைய போக் கான வளர்ச்சியுடன் புதிய வாய்ப்புகளையும் வேலையிழப்புகளையும் சேர்த்தே காண முடியும். 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும் 5 ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவம் பெற்றிருப்பவர்களிடம் தான் வேலைக் குறைப்பைக் காண முடியும். பி.பி.ஒ., ஐ.டி.இ.எஸ்., துறைகளில் 40 சதவீதம் வரை அட்ரிஷன் விகிதம் காணப்படும். ரீடெயில் மற்றும் டெலிகாம் துறைகளிலும் கூட இது கணிசமாக காணப்படும். 2010ம் ஆண்டில் கணிசமாக புதிய வேலைகள் உருவாகும். எனினும் அட்ரிஷன் விகிதமும் கொஞ்சம் காணப்படும் என்பதே வேலை ஆலோசகர்களின் கருத்து.