தகுதியை நிலைநிறுத்தும் பொறியியல் துறை
தொழில் நுட்பங்களை அடிப்படையாக கொண்ட வேலை வாய்ப்புகளில் பொறியியல் படிப்பு விண்ணப்பதாரரின் தகுதியை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கேற்ப இன்ஜின்களை வடிவமைப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குள் எதிர்பார்த்த பொருட்களை குறைவில்லாமல் உற்பத்தி செய்வது, நிறுவனத்தின் பொருளாதார தன்மைக்கேற்ப பொருட்களை அதிக செலவில்லாமல் தயாரித்துக் கொடுப்பது என பொறியியல் துறையை மேற்கொண்டவர்களின் பங்களிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பிரத்யேகமாகஉருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை கூடங்கள், நிறுவனத்தின் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை, அதற்கான உள்கட்டமைப்பு கட்டடம் என அனைத்திலும் தொழில் நுட்பங்களை கற்றுதேர்ந்த பொறியியல் துறையை சார்ந்தவர்களே பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்திறமையான பொறியியல் வல்லுனர்களை அதே பொருளை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனம் அதிக சம்பளம், சலுகைகள் கொடுத்து வேலையில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு இத்துறையில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஏரோஸ்பேஸ், அக்ரிகல்சுரல், ஆட்டோமொபைல், பயோகெமிக்கல், பயோமெடிக்கல், செராமிக், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிகல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ், என்விரான்மென்டல், இண்டஸ்ட்ரியல், இன்ஸ்ட்ரூமென்டேசன், மரைன், மைனிங், மெக்கானிக்கல், மெட்டர்லஜிக்கல், பெட்ரோலியம், டெலிகம்யூனிகேசன், டெக்ஸ்டைல் உட்பட பல்வேறு துறைகளில் பொறியியல் படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. இது தவிர ஏராளமான துணைபடிப்புகளும் இதில் உள்ளன. பிளஸ் டூ வில் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவுகளில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் பொறியியில் துறையை தேர்வு செய்வதற்கு தகுதியானவர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். தான் சார்ந்திருக்கும் துறையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கும் திறன், இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகளுக்கான காரணம் அறியும் திறன், எதையும் மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் ஞாபக சக்தி, மக்களின் தேவைக்கேற்ற கணிப்புகளை உணர்ந்து கொள்ளும் பொதுஅறிவு, எளிதான தொழில் நுட்பங்களை வடிவமைக்கும் கற்பனை மற்றும் அதை உருவாக்கும் படைப்பாற்றல், மனதிற்குள் நினைப்பதை தெளிவான வரைபடமாக வரைந்து நிறுவன உரிமையாளரிடம் விளக்கமளிக்கும் செயலாற்றல் என பொறியியல் வல்லுனர்களின் அடிப்படைதகுதிகள் ஒவ்வொரு துறைக்கேற்ப கூடுதல் தேவைகளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளன. பொறியியல் படிப்பை படிப்பதற்கு நாடுமுழுவதும் உள்ள முக்கிய கல்வி நிலையங்களில் ஒன்றாக திகழ்பவை என்.ஐ.டி.,எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிலையங்களாகும். ஏற்கனவே மண்டல பொறியியல் கல்லூரிகளாக இருந்தவை என்.ஐ.டி.,க்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அலகாபாத், போபால், கோழிக்கோடு, துர்காபூர், ஹமீர்பூர், ஜெய்ப்பூர், ஜலந்தர், ஜாம்ஷெட்பூர், குருஷேத்ரா, நாக்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரூர்கேலா, சில்சார், ஸ்ரீநகர், சூரத், சூரத்கல், திருச்சி, வாரங்கல் போன்ற இடங்களில் என்.ஐ.டி.,க்கள் செயல்பட்டு வருகின்றன. என்.ஐ.டி.,க்கள்,இந்தியன் இண்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி கல்வி நிலையங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர மாநிலங்களில் உள்ள சில கல்லூரிகளிலும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வை மத்திய செகண்டரி கல்வி போர்டு(சி.பி.எஸ்.இ.,) நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள பதினோராயிரம் இடங்களுக்கு ஐந்து லட்சம் பேர் இத்தேர்வை ஆண்டுதோறும் எழுதிவருகின்றனர். பொறியியல் கல்வியில் நாட்டில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை600036.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கராக்பூர்721302.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கான்பூர்208016.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி, இன்ஸ்டிட்யூசன் ஆப் இன்ஜினியர்ஸ் பில்டிங், பான்பஜார், கௌகாதி781001.இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, டில்லி, ஹவஸ்காஸ்,நியூ டில்லி110016.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாம்பே, மும்பை400076.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி 247667.இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிஎச்யூ, வாரனாசி221005.இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ், டான்பட்826004.ஜாகீர் உசேன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, ஏஎம்யூ, அலிகார்202002.பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்டு சைன்ஸ், பிலானி333031.தயாள்பக் எஜூகேசனல் இன்ஸ்டிட்யூட், பெக்குல்டி ஆப் இன்ஜினியரிங், தயாள்பக், ஆக்ரா282005. பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் தொழில்நுட்ப பணிகளில் வேலைக்கு அதிக அளவில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதற்காக பிரத்யேகமாக நடத்தப்படும் தனியார் கல்லூரிகளில் எழுத்துதேர்விற்கானபயிற்சியினை பெற்று தேர்வுபெற வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் தொழிற்சாலைகளில் மேலாளராகவும், கண்காணிப்பாளராகவும்பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.