மாணவர்களே மனஅழுத்தத்தை வெல்லுங்கள்
இந்த தேர்வு பயமானது மனஅழுத்தத்தை மிக அதிகமாக உண்டாக்குகிறது. 70 சதவீத மாணவர்கள் தேர்வு துவங்கும் மாதங்களில் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தேர்வு பயம் ஏற்படுவதற்கு தேர்வு எழுதப்போகிறோம் என்ற உணர்வு மட்டும் காரணம் ஆகாது. தேர்வில் வெற்றி பெற வேண்டும். தேர்வு முடிவுகள், கட்ஆப் நல்ல முறையில் இருக்க வேண்டும் போன்ற சில காரணங்கள் மாணவர்களுக்கு, போர்களத்தில் நிறுத்தியது போன்ற மனநிலையை அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல் குடும்ப சூழல், குடும்பத்தில் உள்ளவர்களின் அணுகுமுறை போன்றவையும் சில மனஅழுத்தம் ஏற்பட காரணிகளாக அமைகின்றன. இது போன்ற காரணிகளை தவிர்க்க இயலாது. ஆனால் இவைகளை கட்டுப்படுத்தும் முறையை அறியலாம். தேர்வு நேரத்தின் போது மனஅழுத்தம் தவிர்க்க வழிமுறைகள் * சத்தான உணவுப்பொருட்களை உண்ணுங்கள். * போதுமான ஓய்வு பெறுங்கள். பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். * உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யுங்கள். * எதையும் பாசிட்டிவ்வாக எண்ணுங்கள். * படிக்கும் நேரத்தில் ஆழ்ந்து படியுங்கள். * டிவி பார்க்கும் நேரத்தை குறையுங்கள். * படித்ததை மற்றவர்களுடன் கலந்து ஆலோசனை செய்யுங்கள். * ஒரு முடிவு எடுக்கும் முன் அமைதியாக ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து எடுங்கள். * தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் படித்து முடித்து விட வேண்டும். * காலை எழுந்தவுடன் படிப்பது மிகவும் நல்லது. மேற்கண்ட முறைகளை சிறப்பாக கையாள்வதின் மூலம் தேர்விற்கு முன்னதாக ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்த்து தேர்வில் சிறப்பாக செயல்படுங்கள்.