உள்ளூர் செய்திகள்

வான்வெளியில் வரலாறு படைக்க...

பரபரப்பான நகர வாழ்க்கை வாழும் நபர்கள் வானத்தை பார்க்கும் தருணங்கள் மிகவும் குறைவு. எப்பொழுது வானத்தை பார்த்தீர்கள்? என்று கேட்டால், எத்தனை நாட்களுக்கு முன் பார்த்தோம்? என்று சிந்திக்க மாட்டார்கள், எத்தனை மாதங்களுக்கு முன் பார்த்தோம்? என்றுதான் தங்கள் சிந்தனையை செலுத்துவார்கள். ஆனால் சிற்றூர்களில் வாழும் மக்கள் வானத்தை காணாத நாட்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கும். பரந்து விரிந்த வானமும் அதற்கு அப்பால் உள்ள அண்ட வெளியும் பல பேருண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.வானமானது மழையை, காற்றை, வெயிலை, குளிரை முன்னதாகவே கண்டுகொள்வதற்கான காலக் கண்ணாடியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. வானம் அளவில்லாத அற்புதங்களைக் கொண்டது. அதிசயங்களை கண்டுகொள்வதற்கான ஆர்வமும், நிதானமான பொறுமையும், ஆராய்வதற்கான ஈடுபாடும் கொண்டவர்களுக்கு வானம் ஒரு அறிவுச் சுரங்கமாக தன்னை வெளிப்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. பறவையை கண்டு விமானம் படைத்தான். விமானத்திற்கு அடுத்து என்ன என்று சிந்தித்ததன் விளைவாக கிரகங்களை தாண்டி ஆராய்ச்சிகள் சென்றுகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளில் உங்கள் பங்களிப்பையும் செலுத்த விரும்புகிறீர்களா? வரலாறு படைக்க ஆசையா? ஒவ்வொரு நாளையும் புதிய கோணத்தில் காண ஆர்வமா? அப்படியெனில் தேர்ந்தெடுங்கள் வான்வெளி பொறியியல் துறையை. கல்வித் தகுதி இளநிலை பொறியியலில் ஏரோநோட்டிகல் இன்ஜினியரிங்முதுநிலை பொறியியலில் ஏரோநோட்டிகல் இன்ஜினியரிங் அல்லது "ஏரோநோட்டிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா"வினால் நடத்தப்படும் தேர்வு அல்லது ஏ.எம்.ஐ.இ. ஆல் நடத்தப்படும் தேர்வில் குறிப்பிடத்தக்க தேர்ச்சி சதவிகிதத்தை பெற்றிருக்க வேண்டும். வேலை வாய்ப்புகள் உலகின் வான்வெளி சந்தையில் 9வது இடத்தில் இந்தியா உள்ளது. வணிக ஆய்வறிக்கைகளின் படி அடுத்த சில வருடங்களில் 1,000 முதல் 1,400 விமானங்களை இந்தியா வாங்க இருப்பதாக கூறுகின்றன. இதனால் வான்வெளி பொறியாளர்களுக்கு வணிக விமானப் போக்குவரத்து நிறுவனங்களிலும், ராணுவம், பாதுகாப்பு போன்ற துறைகளிலும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக இந்துஸ்தான் ஏரோநோடிக்ஸ் லிமிடெட்(எச்.ஏ.எல்), இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐ.எஸ்.ஆர்.ஓ. விலும் வேலை வாய்ப்புகளை பெறலாம். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையத்திலும் இந்திய பொறியாளர்கள் பலர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். வளர்த்துக்கொள்ளவேண்டிய திறன்கள் அறிவியல், கணித அறிவு. மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கம்ப்யூட்டர், தெர்மல் துறைகளில் தெளிவுபெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது அதற்கு தேவைப்படும் பொருளாதாரம் மற்றும் ஏற்படும் சவால்கள் குறித்து கணக்கிடும் திறன் இருக்க வேண்டும். சிறந்த கல்வி நிறுவனங்களில் சில இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூர்.ஐ.ஐ.டி. (சென்னை, மும்பை, கான்பூர், காரக்பூர்), இந்தியா.இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், டேராடூன்.தி டெல்ஃப்ட் யூனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி, நெதர்லாந்து.மசாகுசெட்ஸ் இன்ஸ்டிடீயூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !