உள்ளூர் செய்திகள்

புதிய திறன் இல்லாதவர்களை ஏ.ஐ., எளிதில் மாற்றிவிடும்

வரும் காலங்களில் மாணவர்கள், பாடப்புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையால் மட்டும், வெற்றி பெற முடியாது. இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில், பிரச்னைகளை தீர்க்கும் திறன் கொண்டவர்களே, அதிக மதிப்பு பெறுவர்.அதற்காக, மாணவர்கள், '4சி' எனப்படும் 'கம்யூனிகேஷன், கிரிட்டிக்கல் திங்கிங், கிரியேட்டிவிட்டி' மற்றும் கொலாபரேஷன்' ஆகிய திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம்.தொழில்நுட்ப வளர்ச்சி, ஏ.ஐ., தொழில்நுட்பம் மனிதர்களை மாற்றிவிடும்; வேலை வாய்ப்புகளை இழக்க செய்யும் என்பது தவறு.ஆனால், புதிய திறன்களை கற்றுக் கொள்ளாதவர்களை, அவை மாற்றிவிடும் என்பதில் சந்தேகமில்லை. அதனால், மாணவர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்வதில், கவனம் செலுத்த வேண்டும்.நம் தாத்தா பாட்டி காலத்தில், 'டைப் ரைட்டர்' இருந்தது; பின்னர் கணினி வந்தது போல, தொழில்நுட்பம் தொடர்ந்து மாற்றம் அடைந்து வந்தாலும், மனிதர்களின் தேவையும், பங்களிப்பும் குறையவில்லை.எனவே, 'டிகிரி' மட்டும் போதாது; அதனுடன் இணைந்த, 'ஸ்கில் செட்' மற்றும் நல்ல அணுகுமுறை மிகவும் அவசியம். பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றுவதோடு, சமுதாயத்திற்கு பயனளிக்கும் விதத்தில், மாணவர்கள் உங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.- நாஸ்காம் இயக்குநர் உதயசங்கர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !