உள்ளூர் செய்திகள்

உதவித்தொகையுடன் தொல்லியல் படிப்புகள்

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் நான்கு பிரிவுகளில் முதுநிலை டிப்ளமா படிப்புகளை வழங்குகிறது.படிப்பு: தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பு - பி.ஜி.டி.ஏ.,படிப்பு காலம்: 2 ஆண்டுகள்பயிற்றுமொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்தகுதி: ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பு படிப்பு: கல்வெட்டியல் முதுநிலை பட்டயப் படிப்பு - பி.ஜி.டி.இ., படிப்பு காலம்: 2 ஆண்டுகள்பயிற்றுமொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்தகுதி: தமிழ், இந்திய வரலாறு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்புபடிப்பு: மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுநிலை பட்டயப் படிப்பு - பி.ஜி.டி.எச்.எம்.எம்.,படிப்பு காலம்: 2 ஆண்டுகள்பயிற்றுமொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்தகுதி: மானுடவியல், சமூகவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், நிலவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது கட்டடப்பொறியியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு.படிப்பு: சுவடியியல் முதுநிலை பட்டயப் படிப்பு - பி.ஜி.டி.எம்.எஸ்.எஸ்.,படிப்பு காலம்: ஓர் ஆண்டுபயிற்றுமொழி: தமிழ்தகுதி: தமிழ் பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புஉதவித்தொகை: சேர்க்கை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தலா ரூ.8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் அல்லது இ-மெயில் அல்லது நேரடியாக விண்ணப்பத்தை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஜாதி சான்று நகல்களுடன் இணைத்து முதன்மை செயலர் மற்றும் ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு இறுதி நாளுக்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.சேர்க்கை முறை: பிரத்யேக நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விபரங்களுக்கு: www.tnarch.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !