தர மதிப்பீடுகளை அறிந்து கல்லுாரியை தேர்வு செய்யுங்கள்
ஆங்கிலம் படிப்போருக்கு, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. மாணவர்கள் தர மதிப்பீடுகளை அறிந்து, கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். இந்தியாவில், 19,000 கலை கல்லுாரிகளும், 16,500 அறிவியல் கல்லுாரிகளும், 13,500 வணிக படிப்புகள் சார்ந்த கல்லுாரிகளும் உள்ளன. இது, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.பொறியியல் உள்ளிட்ட பிற துறையினர், அந்தந்த துறை சார்ந்த வேலைக்கு மட்டுமே செல்ல இயலும். ஆனால், கலை மற்றும் அறிவியில் துறை மாணவர்கள் மட்டுமே, அனைத்து துறையிலும் வேலைக்கு செல்ல முடியும்.கலைத் துறையில் தற்போது, ஆங்கிலம் படிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், இளங்கலை ஆங்கிலம் படிக்கும் மாணவர்களுக்கு, பல துறையிலும் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறன.கணித துறையை பொறுத்தவரையில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில், தரவு பகுப்பாய்வாளர் உள்ளிட்ட, அதிக ஊதியத்துடன் கூடிய பதவிகள் காத்திருக்கின்றன. இதற்கு, கணிதம், புள்ளியல் உள்ளிட்ட துறையை சார்ந்தவர்கள் தகுதி வாய்ந்தவர்.அதேபோல், இயற்பியில், வேதியியல் துறை மாணவர்களுக்கு, டாக்டர் ரெட்டிஸ் உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.மேலும், இளங்கலை வணிகம், பி.பி.ஏ., - எம்.பி.ஏ., உள்ளிட்ட துறைகளில், நிறுவனங்களின் வழிக்காட்டுதலுடன் கூடிய சிறப்பு பயிற்சிகள் கல்லுாரிகளில் வழங்கப்படுகின்றன.கலை மற்றும் அறிவியல் துறையை தேர்வு செய்யும் மாணவர்கள், கல்லுாரியின் தரம் குறித்து அறிவது அவசியம். தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம், ஒவ்வொரு கல்லுாரியின் தரத்தையும் நிர்ணயம் செய்து, தர மதிப்பீட்டு குறிப்பீட்டை வழங்கி உள்ளது.அதேபோல், கல்லுாரியின் என்.ஐ.ஆர்.எப்., மதிப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் அறிந்து, பின் தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். விரைவில் வேலை பெற விரும்பும் மாணவர்கள், தொழில்துறை பி.காம்., உள்ளிட்ட பிரிவுகளை தேர்வுச் செய்து படியுங்கள்.தற்போது, லாஜிஸ்டிக்ஸ் துறை வளர்ந்து வருகிறது. மத்திய அரசு இத்துறைக்கென கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. அரசே, இத்துறை மாணவர்களுக்கு, திறன் பயிற்சியுடன் கூடிய ஊதியத்தையும் வழங்கி வருகிறது.- ராஜன், பேராசிரியர்