உள்ளூர் செய்திகள்

சைபர் செக்யூரிட்டி படிப்பு

இணையத்தின் வழியாக தகவல்கள் பரிமாறப்படும் இக்காலத்தில், தனிநபர் தகவல்கள் முதல் அரசாங்கம் தொடர்புடைய தரவுகள் வரை அனைத்துக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தரவுகளை பாதுகாப்பது, ஹேக்கிங், வைரஸ்கள், பிஷிங், மால்வேர், ரேன்சம்வேர் போன்ற உள்நுழைவு ஆபத்துகளிலிருந்து அமைப்புகளை காப்பது ஆகிய பணிகளை சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மேற்கொள்கின்றனர்.படிப்புகள்இளநிலை படிப்பில் மாணவர்கள் பி.டெக்., / பி.இ., மற்றும் முதுநிலையில் எம்.டெக்., /எம்.எஸ்சி., ஆகிய பட்டங்களை தேர்ந்தெடுப்பர். இளநிலை படிப்புக்கு மாணவர்கள் பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்று ஜே.இ.இ., டி.என்.இ.ஏ., போன்றவற்றின் வழியாக சேரலாம். முதுநிலை படிப்பிற்கு, பி.இ., / பி.டெக்., அல்லது சமமான பட்டப்படிப்பில் சைபர் பாதுகாப்பு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பட்டம் பெற்று கேட், டான்செட் போன்ற தேர்வுகளின் மூலம் சேர முடியும்.பாடத்திட்டம்கிரிப்டோகிராபி, நெட்வொர்க் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங், டிஜிட்டல் தடயவியல், மால்வேர் பகுப்பாய்வு, கிளவுட் பாதுகாப்பு, இடர் மேலாண்மை, பாதுகாப்பு தணிக்கை, பயர்வால்கள் மற்றும் ஊடுருவல் கண்டறிதல் அமைப்புகள் போன்றவை அடங்கும். இவை அனைத்தும் தகவல் பாதுகாப்பு உள்வாங்குவதற்கும் பாதுகாப்பதற்குமான திறன்களை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளன.கல்வி நிறுவனங்கள்இந்தியாவில் ஐ.ஐ.டி.,க்கள், ஐ.ஐ.ஐ.டி.,க்கள், என்.ஐ.டி.,க்கள், அண்ணா பல்கலை, சாஸ்த்ரா பல்கலை, சி.ஐ.டி., எம்.ஐ.டி., ஐ.ஐ.டி., பல்கலை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகின்றன.வேலை வாய்ப்புபடிப்பை முடித்த பின் மாணவர்கள் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், நெறிமுறை ஹேக்கர், தகவல் பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு ஆலோசகர், டிஜிட்டல் தடயவியல் நிபுணர், எஸ்.ஓ.சி., ஆய்வாளர், நெட்வொர்க் பாதுகாப்பு பொறியாளர் போன்ற பணிகளில் பணியாற்ற முடியும். டி.ஆர்.டி.ஓ., இஸ்ரோ போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. தொடக்க ஊதியம் ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ளது. எதிர்கால வளர்ச்சிசைபர் பாதுகாப்பு துறை, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, ஐ.ஓ.டி., பிளாக்செயின் போன்ற முன்னேறிய தொழில்நுட்பங்களுடன் இணைந்து வளர்கின்றது. உலகளவில் ஹேக்கிங் மற்றும் தரவிழைப்பு சம்பவங்கள் அதிகரிக்கின்றபோது, பாதுகாப்பு நிபுணர்களின் தேவையும் அதிகரிக்கிறது. ஐ.நா., நேட்டோ, இந்திய பாதுகாப்பு, வங்கி, சுகாதாரம், மின் வணிகம், அரசு சேவைகள்போன்ற அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு நிபுணர்களின் பங்கு முக்கியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !