வாய்ப்புகள் திறமையைப் பொறுத்தது!
மாணவர்களை, தேர்வுக்காக மட்டுமே தயார்படுத்தாமல், தொழில்நிறுவனங்களில் திறம்பட செயலாற்றுவதற்குரிய தகுதிகளை பெற்றவர்களாக உருவாக்குவது, கல்வி நிறுவனங்களின் பணி! பொறியியல் கலந்தாய்வு மூலமாக, பல்வேறு மதிப்பெண் நிலையிலிருந்து மாணவர்கள் கல்லூரிக்கு வருவர். சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்களும் கல்லூரிக்கு புதியதாக வருவதால், அவர்கள் பொறியியல் பாடங்களை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், அடிப்படையில் இருந்து பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். ஏனெனில், எந்த ஒரு விஷயத்திலும் அடிப்படையை அறிந்துகொள்ளாமல், ’அட்வான்ஸ்டு’ நிலைக்கு செல்ல முடியாது. மாணவர்களிடம் உள்ள பயத்தை போக்கும்வகையில் இலவச ‘பர்சனாலிட்டி’ வகுப்புகள் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படவேண்டும். வெறும் புத்தங்களில் உள்ளவற்றை மட்டுமே மாணவர்களுக்கு படிக்க கற்றுக்கொடுக்காமல், எந்த ஒரு விஷயத்தையும், சுயமாக ஆராய்ந்தறிந்து, கற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்க செய்து, ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பிக்கவும் ஆதரவளிக்கப்பட வேண்டும். அப்போது, மாணவர்களின் திறன் மற்றும் தன்னம்பிக்கை உயர்ந்து, வேலைவாய்ப்பு குறித்த கவலைகள், அவர்களிடம் காணாமல் போய்விடும் என்பதை செயல்முறையில் உணர்ந்துள்ளேன்! கல்லூரிக் காலம்’சினிமாக்களில் காண்பிக்கப்படுவது போன்று, கல்லூரி வாழ்க்கை எப்போதும் ‘ஜாலி’யாக இருக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தை இன்றைய மாணவர்கள் பெற்றுள்ளனர். ஆனால், உண்மையான கல்லூரிக் காலம் அப்படி இல்லை என்பதை புரிந்துகொண்டு, மாணவர்கள், தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் உன்னத இடமாக கல்லூரியை பார்க்க வேண்டும். ஒருவருக்கு, எந்த ஒரு துறையிலும், அந்ததுறை சார்ந்த திறமையும், அறிவும் உள்ளது என்றால், அவருக்கான தேவையும், வாய்ப்பும் எப்போதும் இருக்கும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உற்பத்தி துறை நிறுவனங்கள், பொருட்களை தொடர்ந்து உற்பத்தி செய்யவேண்டியுள்ளது. உற்பத்தித் துறை மட்டுமின்றி, அனைத்து துறை நிறுவனங்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே, வாய்ப்புகள் என்பது அவர்களது, திறமையைப் பொறுத்துதான், என்பதை மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். வரவேற்கத்தக்கதுதேசிய அளவிலான பொறியியல் பொது நுழைவுத்தேர்வு வரவேற்கத்தக்கது. இதன்மூலம், அனைத்து தரப்பினருக்கும், சிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் அடிப்படையை தெரிந்த மாணவர்களுக்கு இத்தேர்வில் வெற்றி பெறுவது என்பது எளிதானது. கட்டாயத்தின் பேரிலும், ஆர்வமில்லாமலும் பொறியியல் படிக்க வரும் மாணவர்கள் தான் இந்த பொது நுழைவுத்தேர்வின் மூலம் வடிகட்டப்படுவர். எனவே, பொது நுழைவுத்தேர்வின் மூலம் உண்மையான தகுதிவாய்ந்த பொறியாளர்கள் நமது நாட்டுக்கு கிடைப்பார்கள் என்பது எனது கருத்து! -எஸ்.பிரியதர்ஷன், துணைத் தலைவர், அபோலோ கல்வி நிறுவனங்கள், சென்னை.