திறமை வெளிப்பட சுதந்திரம் அவசியம்!
மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமின்றி, எந்தத் துறையை சார்ந்த மாணவர்களுக்கும் சட்ட அறிவு அவசியம். சட்ட அறிவு ஒருவரது, தன்னம்பிக்கையை வளர்க்கிறது. அதனால்தான், மருத்துவ மாணவர்களாக இருந்தாலும் சரி, பொறியியல் மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்களது படிப்பின் உடனேயே, சட்டப்படிப்பையும் சேர்த்து படிக்கும் வகையிலான புதுமையான முறையை அமல்படுத்தியுள்ளோம்! சட்டப் படிப்பைப் போல், அனைத்து துறை மாணவர்களுக்கும், மருத்துவ முதலுதவி குறித்த அறிவும் அவசியம். ஆகவேதான், எந்த துறையை சேர்ந்த மாணவர்களும், அவர்களது படிப்புகாலத்தின்போதே மருத்துவ முதலுதவியை ஒரு பாடமாக கற்கும் வகையிலான பாடத்திட்டத்தை பின்பற்றுகிறோம். இதுபோன்று 80 பாடப்பிரிவுகளை, நாங்கள் வழங்குகிறோம். எங்களது முன்னேற்றத்திற்கு காரணமும், எந்த ஒரு விஷயத்தையும் புதுமையாகவும், மாறுபட்டும் செய்வது தான்! மாணவர்களே, அவர்களுக்கான பாடத்திட்டத்தை, ஆசிரியர்களை, பாட நேரத்தை, அவர்களே தேர்வு செய்துகொள்ளும் வகையிலான பாடத்திட்டத்தை வழங்குகிறோம். இதன்மூலம், எப்போது படிக்கவேண்டும், எதை படிக்கவேண்டும் என்பதை மாணவர்களே சுயமாக தேர்வு செய்துகொள்ள முடியும். கட்டுப்பாடுகள்சுதந்திரமாக செயல்படும் பட்சத்தில் தான், ஒருவரது தனித்திறமை வெளிப்படும்; பல்வேறு புதுமைகளை புகுத்தவும் முடியும்; பல சாதனைகளை நிகழ்த்தவும் முடியும்! தனியார் பல்கலைக்கழகங்கள், எந்தவித கால தாமதமுமின்றி, குறித்த நேரத்தில் தேர்வை நடத்துகின்றன; குறித்த நேரத்தில் தேர்வு முடிவுகளை அறிவிக்கின்றன; குறித்த நேரத்தில் பட்டங்களையும் வழங்குகின்றன. ஆனாலும், மத்திய, மாநில அரசு பல்கலைக் கழகங்களைவிட, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்படுகின்றன! ஒரு கல்வி நிறுவனத்திற்கு, ‘பல்கலைக்கழகம்’ என்ற அந்தஸ்து வழங்கப்படுவதே சுயமாக இயங்குவதற்குத்தானே? 1940ம் ஆண்டுகளிலேயே, ‘கல்வியில் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்’ என ராதாகிருஷ்ணன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது, இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி நிறுவனங்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்தால், அதைத்தான் அனைத்து கல்வி நிறுவனங்களும் செய்யும். அதில் என்ன போட்டி இருக்கிறது? அதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது? மற்ற நாடுகளைப்போல், அனைத்து கல்லூரிகளுக்கும் கூட சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும், என்பது எனது கருத்து! வேலைவாய்ப்புதரமான கல்வி வழங்குவது தான் கல்வி நிறுவனங்களின் பணியே தவிர, வேலை வாங்கித் தருவது, கல்வி நிறுவனங்களின் பணி அல்ல. நாம் பலருக்கு வழங்குவதே வேலைவாய்ப்பு. இளைஞர்கள் மற்றொர்வர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல், தொழில்முனைவோராகி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும். அதுதான் சரியான ‘வேலை வாய்ப்பு’! அப்போது வீடும், நாடும் முன்னேறும்! - முனைவர் என்.எம். வீரய்யன், வேந்தர், சவீதா பல்கலைக்கழகம், சென்னை.