மேலாண்மை படிக்க எழுதுங்கள் ‘கேட்’!
நாட்டின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களாக திகழும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்’ல் சேர்க்கை பெற ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இக்கல்வி நிறுவனங்களில் சேர ‘கேட்’ எனும் பொது மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வை அவசியம் எழுத வேண்டும்! கல்வி நிறுவனங்கள் அகமதாபாத், கல்கத்தா, பெங்களூர், லக்னோ, இந்தூர், கோழிக்கோடு, ஷில்லாங், ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், திருச்சிராப்பள்ளி, உதய்பூர், அமிர்தசரஸ், பீகார், சம்பல்பூர், விசாகப்பட்டிணம், ஜம்மு மற்றும் உத்தரகண்ட் ஆகிய நகரங்களில், அந்தந்த ஊரின் பெயரிலேயே இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பிசினஸ் -ஸ்கூல்ஸ், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும், ‘கேட்’ மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை வழங்குகின்றன. படிப்புகள்எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்.ஏ.,(போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட்) மற்றும் எப்.பி.எம்.,(பெல்லோ புரொக்ராம் இன் மேனேஜ்மெண்ட்) போன்ற பல்வேறு மேலாண்மை பட்டப்படிப்பில் உள்ள இடங்களை நிரப்புவதற்கு, ‘காமன் அட்மிஷன் டெஸ்ட்’ மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. யார் எழுதலாம்?அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு முறை:கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட் (சி.பி.டி.,) முறையில், ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், 180 நிமிடங்கள் நடைபெறும் இத்தேர்வில், மூன்று பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல் பகுதி: வெர்பல் எபிலிட்டி மற்றும் ரீடிங் காம்பிரிஹென்சன் இரண்டாம் பகுதி: டேட்டா இன்டர்பிரிடேஷன் அன்ட் லாஜிகல் ரீசனிங் மூன்றாம் பகுதி: குவான்டிடேட்டிவ் எபிலிட்டி குறிப்பு: தவறான ‘மல்டிபிள் சாய்ஸ்’ பதில்களுக்கு மதிப்பெண் பிடித்தம் செய்யப்படும். விபரங்களுக்கு: www.iimcat.ac.in