உள்ளூர் செய்திகள்

‘வெட்டி’யாக இருக்க விருப்பமில்லையாம்!

19 நாடுகளில்  14 ஆயிரம் வேலை தேடுபவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 40 சதவீதம் பேர், தங்களுக்கு நிர்ணயிக்கப்படாத பணிநேரம் கொண்ட வேலை தான் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர், வேலை முடிந்த பின்பும் வெட்டியாக அலுவலகத்தில் அமர்ந்திருப்பதில் விருப்பமில்லை என்றும், 26 சதவீதம் பேர் அலுவலகத்திற்கு வரும் நேரமும், பணி முடித்து வீட்டிற்கு கிளம்பும் நேரமும் தங்களது விருப்பம்போல் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் எதிர்பார்ப்பின்படி, பணிநேரத்தில் இலகுத் தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும், ஊழியர்களின் செயல்திறனைப் பொறுத்து சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு அந்த ஆய்வு வலியுறுத்துகிறது! கால மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனங்கள் மாறியாக வேண்டுமாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !