வெளிநாட்டு கல்வி சுலபமே!
வெளிநாடுகளில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம்கொண்ட மாணவர்கள், அந்நாடுகளின் கல்வித் தரம், அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் விபரம் மற்றும் விசா நடைமுறைகள் போன்ற பல்வேறு தகவல்களை அறிந்துகொண்டால் வெளிநாட்டுக் கல்வி மிக எளிதான ஒன்றுதான்! நம்பகமான முறையில் அத்தகைய தகவல்களை எங்கு, யாரிடம் பெறுவது என்பதில் பலருக்கும் தயக்கமும், குழப்பமும் இருக்கலாம். அத்தகைய குழப்பத்தை போக்கவே, ஒவ்வொரு நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் பற்றிய விபரங்கள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. சிறந்த தொழில் வளம் மிக்க நாடுகள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள ஜப்பானில், தொழில்நுட்பம், தொழில்முறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். கல்வியில் சிறந்த ஆற்றல் கொண்ட மாணவர்களின், கல்வி செலவுகளை குறைக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முக்கிய இணையதளங்கள்ஜப்பான் அரசாங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள: www.japan.go.jp ஜப்பான் விசா நடைமுறைகள் பற்றிய விபரங்களுக்கு: www.in.emb-japan.go.jp ஜப்பான் கல்வி நடைமுறைகள் பற்றிய பொதுவான தகவல்களுக்கு: www.g-studyinjapan.jasso.go.jp/en கல்வி கட்டணம், உதவித்தொகை, விடுதி, மருத்துவக் காப்பீடு மற்றும் வாழ்வாதார செலவுகள் போன்ற விரிவான தகவல்களுக்கு: www.jasso.go.jp மற்றும் www.studyjapan.go.jp/en பல்கலைக்கழகங்கள் பற்றி அறிய: www.jasso.go.jp/en/index.html மற்றும் https://www.g-studyinjapan.jasso.go.jp/univ_search/ ஜப்பான் ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளை பார்வையிட: http://dl.ndl.go.jp/ மற்றும் http://ci.nii.ac.jp/ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஜர்னல்ஸ் பற்றி அறிந்து கொள்ள: www.jstage.jst.go.jp உதவித்தொகை பற்றிய விபரங்களுக்கு: www.jasso.go.jp/en/study_j/scholarships/brochure.html#Contents பெல்லோஷிப் பற்றி அறிய: www.jsps.go.jp/english/e-inv_researchers/index.html அரசு உதவித்தொகை பற்றி அறிந்து கொள்ள: www.in.emb-japan.go.jp/Education/japanese_government_scholarships.html சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த இடத்தை பிடித்துள்ள சிங்கப்பூர், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது. உயர்கல்விக்கு மட்டுமல்லாமல் தொடக்கநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்பை இங்கு தொடர்வதும் சிறப்பானது. சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள: www.mfa.gov.sg கல்வி நிறுவனங்கள், கல்வி கட்டணம், சேர்க்கை முறை ஆகிய தகவல்களுக்கு: www.moe.gov.sg அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் உதவித்தொகைகள் பற்றி அறிந்து கொள்ள: www.a-star.edu.sg சிங்கப்பூரில் கல்வியை தொடரும் மாணவர்கள், ‘ஸ்டூடன்ட் பாஸ்’ பற்றி அறிந்து கொள்ள www.ica.gov.sg விசா நடைமுறைகள் பற்றிய விவரங்களுக்கு: www.mfa.gov.sg/newdelhi , www.mfa.gov.sg/chennai மற்றும் www.mfa.gov.sg/mumbai பிரான்ஸ் பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, மானுடவியல் உள்ளிட்ட துறைகளில், சிறந்த பாடத்திட்டத்தை வகுத்து, செயல்முறை பயிற்சி வகுப்புகளுடன் தரமான கல்வியை கற்பிக்கிறது, பிரான்ஸ். பெரும்பாலான பல்கலைக் கழகங்கள், ஆங்கில வழிக் கல்வி முறையில் பட்டப்படிப்பை வழங்குவதால், மாணவர்களுக்கு, பிரெஞ்சு மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரான்ஸ் அரசாங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள http://www.gouvernement.fr பிரான்சின் பொருளாதார நிலை, நிதி மற்றும் தொழில் நிறுவனங்களை பற்றி அறிய www.economie.gouv.fr விசா நடைமுறைகள் பற்றிய பொது தகவல்களுக்கு www.diplomatie.gouv.fr பிரான்சின் உயர் கல்வி விவரங்களுக்கு www.campusfrance.org இந்திய மாணவர்களுக்கான, நிதி உதவித்தொகை, கல்வி நிறுவனங்கள், விசா விண்ணப்பிக்கும் முறை மற்றும் தங்கும் இடம் போன்ற இதர விவரங்களுக்கு www.inde.campusfrance.org அமெரிக்கா உயர்கல்வியை வெளிநாட்டில் திட்டமிடும் மாணவர்களின் முதல் தேர்வு அமெரிக்கா! அறிவியல், சட்டம், பொறியியல் என அனைத்து துறைகளிலும் சிறந்த கல்வியை வழங்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு நிகர் வேறு எதுவுமில்லை. கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அந்நாட்டு அரசாங்கம் பிரத்யேகமான கல்வி நிதி உதவித்திட்டங்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கை, பற்றின முழு விவரங்களை அறிந்து கொள்ள https://www.usa.gov/ இந்திய மாணவர்களுக்கான உயர் கல்வி விவரங்களுக்கு http://www.usief.org.in/ விசா விவரங்களுக்கு https://in.usembassy.gov/ மற்றும் http://www.ustraveldocs.com/in/ அமெரிக்காவின் பொது கல்வி நடைமுறை கொள்கைகள் பற்றின விவரங்களை அறிந்து கொள்ள: https://educationusa.state.gov/ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பட்டப்படிப்புகள் பற்றின முழு விவரங்களை அறிய: http://www.chea.org மற்றும் https://ope.ed.gov/accreditation/ டெக்சாஸ் நகரில் உள்ள, கல்வி நிறுவனங்கள் பற்றின தகவல்கள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் சேர்க்கை விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய www.applytexas.org பின்லாந்து உலகில் சிறந்த கல்வி கொள்கையை பின்பற்றி வரும், குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் என்றுமே முதலிடம் பிடித்து வருகிறது பின்லாந்து. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், மாணவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுக்கும் விதம் சற்றே மாறுபட்டுள்ளது. மிகவும் எளிமையான பாடத்திட்டத்தை வடிவமைத்து, குறைந்த நேர வகுப்பறை கல்வி மூலம் மாணவர்களின் ஆற்றல் அறிவை ஊக்குவித்து வருகின்றன அந்நாட்டுக் கல்வி நிறுவனங்கள். பின்லாந்து அரசாங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள: https://finland.fi/ பின்லாந்து குடியேற்ற மற்றும் குடியுரிமைத் துறை பற்றி தெரிந்து கொள்ள: http://www.migri.fi/studying_in_finland கல்வி நடைமுறைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பற்றின தகவல்கள், சேர்க்கை முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை, கல்வி கட்டணம் மற்றும் உதவித்தொகைகள் போன்ற அனைத்து விவரங்களுக்கும் http://www.studyinfinland.fi விசா விவரங்களை பற்றி அறிய: http://www.finland.org.in மற்றும் http://www.vfsglobal.com/Finland/India/ ஆஸ்திரேலியா பொறியியல், தொழில்நுட்பம், கணினி அறிவியல், மேலாண்மை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சிறந்த கல்வி வழங்கப்படும் அதே தருணம், ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க பெரும் தொகையை செலவிட வேண்டும் என்பதும் நிதர்சனம். ஆகையால், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் வழங்கும் கல்வி நிதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது சிறந்தது. கல்வி நிறுவனங்கள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் உதவித்தொகை பற்றி அறிந்து கொள்ள: www.studyinaustralia.gov.au விசா நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்ள: http://india.embassy.gov.au ஆஸ்திரேலியாவின் ஆய்வு மற்றும் பரிசோதனை துறை பற்றிய www.aqis.gov.au ஆஸ்திரேலியாவின் பொது கல்வி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள: www.education.gov.au வேலை மற்றும் ஊதியம் பற்றி அறிந்துகொள்ள: www.fairwork.gov.au பிரிட்டன் சீரான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள பிரிட்டனில், உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பல நாட்டு மாணவர்களின் விருப்பமாகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது. அங்குள்ள பல்கலைக்கழகங்கள், பாடங்களை கற்பிப்பதோடு மட்டும் இல்லாமல், மாணவர்களின் ஒட்டுமொத்த திறன் வளர்ப்பிலும் ஆர்வம் செலுத்துகின்றன. அதனால், பிரிட்டனில் கல்வி பயிலும் மாணவர்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்படுகின்றனர். பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் சலுகைகள், குடியுரிமை, விசா நடைமுறைகள், கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சி விவரங்கள் மற்றும் செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள: www.gov.uk அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் குறித்த தகவல்களுக்கு: https://www.gov.uk/check-a-university-is-officially-recognised பாடப்பிரிவுகள் குறித்த விபரங்களுக்கு: http://unistats.direct.gov.uk/ இந்திய மாணவர்களுக்கான உதவித்தொகை மற்றும் உயர் கல்வி பற்றிய விரிவான தகவல்களுக்கு: www.britishcouncil.in விசா விபரங்களுக்கு: www.gov.uk/browse/visas-immigration நியுசிலாந்துபொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல் ஆகிய துறைகளில், மாணவர்களின் அறிவு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுகின்றன நியுசிலாந்து கல்வி நிறுவனங்கள். நியுசிலாந்தின் வெளியுறவு கொள்கை மற்றும் உதவித்தொகை திட்டங்களை பற்றி அறிந்து கொள்ள: www.mfat.govt.nz விசா நடைமுறைகள் பற்றிய முழு விபரங்களுக்கு: www.immigration.govt.nz நியுசிலாந்து அரசின் கல்வி கொள்கை முறைகள் மற்றும் அதன் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள: www.govt.nz அங்கீகாரம் பெற்ற தொழிற்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகள் பற்றிய முழு விபரங்களுக்கு: www.nzqa.govt.nz கனடாசீரான பொருளாதார வளர்ச்சி, தரமான கல்வி, பட்டப்படிப்பை முடித்தவுடன் நிரந்தரமாக குடியேறும் வாய்ப்புகள், சரியான கல்வி கட்டணம் உள்ளிட்ட பல காரணங்களால், உயர்கல்விக்காக கனடாவை நோக்கிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அங்கு, வேளாண்மை, பொருளாதாரம், சமூக அறிவியல், மானுடவியல், மேலாண்மை, மருத்துவம் மற்றும் கலை அறிவியல் என பல பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. பட்டப்படிப்பை முடித்த பின் கனடாவில் வேலை பெறுவதற்கான விதிமுறைகள், விசா நடைமுறைகள் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தை பற்றிய விபரங்களுக்கு: www.cic.gc.ca கல்விக் கொள்கை மற்றும் செயல்பாடுகள் பற்றி அறிய: www.cmec.ca/en/ மேலாண்மை துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பில் கனடா அரசாங்கத்தால் வழங்கப்படும் கல்வி உதவி தொகை பற்றிய விபரங்களுக்கு: http://www.edc.ca முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பற்றிய விரிவான தகவல்களுக்கு: http://www.nserc-crsng.gc.ca முதுநிலை, ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் வழங்கப்படும் உதவித்தொகைகள் குறித்த விவரங்களுக்கு: www.idrc.ca மலேசியா மலேசியாவில் உயர் கல்வி பயில ‘சேட்’, ‘டோபல்’ போன்ற தகுதித் தேர்வுகளை எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், கல்வி நிதி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் ஆங்கில மொழி புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தரமான பாடத்திட்டம், குறைந்த கல்விக் கட்டணம், உதவித்தொகை ஆகியவை மலேசியாவின் சிறப்பம்சம். பாஸ்போர்ட், விசா மற்றும் நுழைவு சீட்டுகள் உள்ளிட்ட இமிகிரேஷன் பற்றிய விபரங்களுக்கு: http://www.imi.gov.my கல்வி நிறுவனங்கள், உதவித்தொகை மற்றும் மாணவர் சேர்க்கை விதிமுறைகள் பற்றி தகவல்களுக்கு: https://www.mohe.gov.my/en/ சர்வதேச உதவித்தொகைகள் பற்றிய விபரங்களுக்கு: https://biasiswa.mohe.gov.my/INTER/ மற்றும் https://biasiswa.mohe.gov.my/INTER/nyroModalDoc/mis.php உயர்கல்வி சேவைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற திறன் பயிற்சி மையங்கள் பற்றிய முழுமையான விபரங்களுக்கு: https://educationmalaysia.gov.my ஜெர்மனி சிறந்த கல்வியாளர்களால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம், தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற ஆய்வகங்களைக் கொண்ட ஜெர்மனியில், கல்வி கட்டணம் சற்றே அதிகம் என்றாலும், அதற்கு இணையாக கல்வி உதவித்தொகையை அந்நாட்டு அரசாங்கம், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. கலாச்சாரம், பொருளாதாரம், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பற்றிய விபரங்களுக்கு: https://www.deutschland.de/en விசா நடைமுறைகள் பற்றிய விரிவான விபரங்களுக்கு: http://www.bamf.de அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பட்டப்படிப்புகள், பாடப் பிரிவுகள் உள்ளிட்ட தகவல்களுக்கு: www.study-in.de கல்வி நிதி உதவித்தொகை மற்றும் திட்டங்கள் பற்றிய விபரங்களுக்கு: www.daad.de பிலிப்பைன்ஸ் மருத்துவப் படிப்பை வெளிநாட்டில் தொடர் விரும்பும் இந்திய மாணவர்கள் சமீபகாலமாக பிலிப்பைன்ஸ் செல்கிறார்கள். குறைந்த கல்வி கட்டணம், ஏதுவான தட்பவெப்ப நிலை, ஆங்கில வழியில் மருத்துவக் கல்வி, மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகள் இல்லை போன்ற காரணிகளே அதற்கு காரணம்! விசா நடைமுறைகள் பற்றிய முழு விபரங்களுக்கு: www.philembassy.no உயர் கல்வி அமைச்சகம் பற்றிய விரிவான தகவல்களுக்கு: http://www.dost.gov.ph அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் உதவித்தொகை பற்றிய தகவல்களுக்கு: http://www.dost.gov.ph , http://www.ched.gov.ph மற்றும் http://peos.poea.gov.ph பிலிப்பைன்ஸ் அரசாங்க கொள்கை, வரி மற்றும் கடன் போன்ற இதர சலுகை பற்றி அறிந்து கொள்ள: https://www.gov.ph/ சுவீடன் மருத்தும், கணிதம், சமூக அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில், மாணவர்களுக்கு ஆராய்ச்சி வழி கல்வி அடிப்படையில் தரமான உயர்கல்வியை வழங்கி வருகிறது. விஞ்ஞான அபிவிருத்தி துறைகள், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை போன்ற துறைகளில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு, அந்நாட்டு பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. மாணவர் விசா நடைமுறைகள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பட்டப்படிப்புகள் மற்றும் கல்வி செயல்திட்டங்கள், கல்வி கட்டணம், உதவித்தொகைகள் பற்றிய முழு விபரங்களுக்கு: https://studyinsweden.se/ சுவீடன் வாழ்க்கை முறை, கலாச்சாரம், வர்த்தகம் போன்ற இதர தகவல்களுக்கு: https://sweden.se கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தை பற்றிய தகவல்களுக்கு: http://www.government.se/ உயர் கல்விக்கான ஸ்வீடிஷ் கவுன்சில் பற்றி அறிய: https://www.uhr.se/en/start/ ஸ்வீடிஷ் உயர் கல்வி ஆணையம் பற்றி அறிய: http://english.uka.se/ மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் சேர்க்கை விண்ணப்பங்கள் பற்றிய விரிவான விபரங்களுக்கு: https://www.universityadmissions.se/intl/start