உள்ளூர் செய்திகள்

புதுமையை கற்க ஏற்ற இடம்!

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கான ஏற்ற நுழைவுவாயில், ஜெர்மனி! அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து, ஜெர்மனி, மாணவர்களின் தேர்வு பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கணினி மற்றும் மருத்துவ ஆய்வகங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகங்கள் இடம் பெற்றிருப்பதால், உலகில் உள்ள 12 சதவீத சர்வதேச மாணவர்கள், தங்களது உயர்கல்வியை ஜெர்மனிய பல்கலைக்கழகங்களில் தொடர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். போட்டிஆடி, பீ.எம்.டப்ளியூ., போர்ட்ஸ், மெர்சடிஸ்-பென்ஸ், வோக்ஸ்வாகன் போன்ற உலகின் முன்னணி கார் நிறுவனங்களின் தொழிற்சாலைகள், அங்கு செயல்படுவதால், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறையில் பட்டப்படிப்பை முடித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு தேவைகள் இங்கு மிகவும் அதிகம். கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் டிசைன், மேனுபாக்சர் அண்ட் ஆப்ரேஷன் ஆப் ஆட்டோமேட்டிவ், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கை பெறுவதில் மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. வேலை வாய்ப்புகள்கல்வி நிறுவனங்கள், பல முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதால், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, துறை சார்ந்த பகுதிநேர வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதேசமயம், வார இறுதி நாட்கள், மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே மாணவர்கள் பணிபுரிய முடியும். தொழில் நிறுவனங்கள் அதிகம் செயல்படுவதால், படிப்பை முடிக்கும் மாணவர்கள் எளிதில், தங்களது தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை தேடிக்கொள்ள முடியும். பட்டப்படிப்பை முடித்த பின், அங்கேயே 18 மாதங்கள் தங்கி, வேலை தேடவும் அனுமதி வழங்கப்படுகிறது! கல்வி நிறுவனங்கள்எல்.எம்.யூ., முனீச் பல்கலைக்கழகம், ஹேய்டெல்பெர்க் பல்கலைக்கழகம், பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் முனீச் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உட்பட 41 பல்கலைக்கழகங்கள் உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது! உதவித்தொகைபொது பல்கலைக்கழகங்களில் குறைந்த அளவிலான கல்வி மற்றும் பயிற்சி கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ’டாட்’ உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !