8 மணிநேர தூக்கம் அவசியம்
இரவு நன்கு உறங்கினாலும்கூட, காலை 8.30 மணிக்கு முன்பு பள்ளி செல்லும் இளம்பருவத்தினர், மன அழத்தத்தால் பாதிக்கப்படும் சூழல் அதிகம் இருப்பதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது! இளம்பருவத்தினரின் உறக்கம் மற்றும் அவர்களது பகல்நேர செயல்பாடுகளில், பள்ளி துவங்கும் நேரம், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இளம்பருவத்தினரின் மன ஆரோக்கியத்திற்கும், பள்ளி துவங்கும் நேரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 8 முதல் 10 மணி நேர தூக்கம், மன ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானது. ஆனால், பள்ளி செல்லும் நாட்களுக்கு முந்தைய இரவுகளில், 90 சதவீதம் பேர் போதுமான உறக்கத்தை பெறுவதில்லை! டிவி, மொபைல், வீடியோ கேம் மற்றும் கபைன் போன்றவற்றை இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று ஆய்வு நடத்திய, அமெரிக்காவின் ரொசெஷ்டர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் ஜேக் பெல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.