உள்ளூர் செய்திகள்

இன்னும் 217 ஆண்டுகள் ஆகும்!

இந்தியா உட்பட, 144 நாடுகளில் உள்ள பல்வேறு துறை தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, பெண்கள் பணி நியமனம் கணிசமாக அதிகரித்து வருகிறது! உலக பொருளாதார குழு மற்றும் லிங்ட்இன் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 12 துறை நிறுவனங்களில் பெண்கள் பணி நியமனம் 6 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.  குறிப்பாக, மென்பொருள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், உற்பத்தி, ஆரோக்கியம் தொடர்புடைய நிறுவனங்களில் பெண்கள் பணி நியமனம் கணிசமாக அதிகரித்துள்ளது. பெண்களின் கல்வி கற்கும் சதவீதம் மட்டுமின்றி, பணித் திறனும் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. எனினும், அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்திய கல்வித் துறையில் பெண்களின் நியமனம் உள்ளது. அதிக பெண்களின் நியமனத்தில் 3வது இடத்தை பிடித்த இத்துறை, தற்போது 6வது இடத்திற்கு சரிந்துள்ளது! தற்போதைய வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, பொருளாதார ரீதியாக இருபாலருக்கான இடைவெளி சமனாக இன்னும் 217 ஆண்டுகள் பிடிக்குமாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !