‘சிமேட்’
மேலாண்மை பட்டப்படிப்பில், முதுநிலை பட்டம் பெற விரும்பும் மாணவர்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி வாரியம் (ஏ.ஐ.சி.டி.இ.,) நடத்தும், ‘சிமேட்’ எனப்படும் ‘காமன் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்’ எழுதுவது சிறந்தது. அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம், ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். வயது வரம்பு: இத்தேர்வை எழுத அதிகபட்ச வயது வரம்பு என்று எதுவும் கிடையாது. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு முறை: கம்ப்பியூட்டர் பேஸ்ட் முறையில், 180 நிமிடங்கள் இத்தேர்வு நடைபெறும். டேட்டா இன்டர்ப்ரிட்டேஷன் அண்ட் குவான்டிடேட்டிவ் டெக்னிக், லாஜிக்கல் ரீசனிங், லேங்குவேஜ் காம்பிரிஹென்சன் மற்றும் ஜெனரல் அவார்னஸ் உள்ளிட்ட 4 பிரிவுகளில், 25 கேள்விகள் வீதம் ஒவ்வொரு பிரிவிலும் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். ‘நெகடிவ்’ மதிப்பெண்கள் உண்டு. விபரங்களுக்கு: http://www.aicte-cmat.in