‘கலாமின் கனவு நிறைவேறும்’
இன்று, அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. பட்டப்படிப்போடு, தேவையான திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக்கொண்டால் நிச்சயம் வேலை, அவர்களைத் தேடி வரும்! இவற்றை உணர்ந்து, தொழில்நிறுவனங்களின் தேவைகளுக்கும், மாணவர்களின் திறமைகளுக்கும் தகுந்தாற்போல் புராடெக்ட் டெவலப்மென்ட், வேலைவாய்ப்புத் திறன் உட்பட ஏராளமான சிறப்பு பயிற்சிகளை எங்கள் கல்வி நிறுவனத்தில் அளிக்கிறோம். தொழில்நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பதால், சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் அறிமுகப்படுத்தி, மாணவர்களை ஆற்றல் மிக்கவர்களாக மாற்றும் வகையில் பயிற்சி அளிகிறோம். மாணவர்களின் அளப்பரியா ஆர்வமும், கல்லூரி நிர்வாகத்தின் உடனடி செயல்பாடும் ஒன்றிணைந்திருப்பதால், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை எளிதாக பெற்றுத்தர முடிகிறது. அதேநேரம், வேலைவாய்ப்பு பெற்றுத் தருவது மட்டுமே எங்களது குறிகோள் இல்லை! மாணவர்களை சுயமாக தொழில் துவங்கச் செய்து, மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்பதே, எங்களது பிரதான நோக்கம்! அதனடிப்படையில், கல்வி நிறுவன வளாகத்திலேயே தொழில்முனைவோர் மையத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம், தொழில்முனைவோர் பயிற்சி அளிப்பது மட்டுமின்றி, வல்லுநர்களுடன் மாணவர்களை நேரடியாக கலந்துரையாடச் செய்கிறோம். தொழில் துவங்க விரும்புபவர்களுக்கு தேவையான தொழில் உரிமம், நிதி உட்பட அனைத்து உதவிகளையும் செய்கிறோம்! எங்களது மாணவர்கள், குறைந்தது 15 புதிய கண்டுபிடிப்புகளை ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தி வருகின்றனர். ‘ரோபாட்டிக்ஸ்’ துறையில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய எங்களது மாணவர், பிற முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு சென்று வகுப்பு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாணவர்கள் கண்டுபிடித்த பொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் தொழில் துவங்கவும் மாணவர்களை ஊக்குவிக்கிறோம். ஒரே வளாகத்தில், அனைத்துவிதமான படிப்புகளையும் வழங்கி வரும், கதிர் கல்வி நிறுவனங்கள், விரைவில் பல்கலைக்கழகமாக மாற வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்! மத்திய மாநில அரசுகள், தொழில் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் என அனைத்து தரப்பினரும் இன்றைய மாணவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நிலையில், நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கண்ட கனவின் படி, நமது மாணவர்களின் கண்டுபிடிப்புகள் விரைவில், உலகம் முழுவதும் சென்றடையும்! இந்திய மாணவர்களின் சாதனையை அனைத்து நாடுகளும் வியந்து பார்க்கும்! அரசுக்கு பாராட்டு!நாட்டிலேயே முதல்முறையாக, ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி, தமிழகத்தில் அளிக்கப்படுகிறது. இத்தேர்வில், 50 சதவீதத்திற்கும் மேலான கேள்விகள் பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதால், பிளஸ் 1 வகுப்பின் முக்கியத்துவம் கருதி, அதனை பொதுத்தேர்வாக, தமிழக அரசு மாற்றியுள்ளது. மேலும், தமிழக மாணவர்கள் அதிக மருத்துவ இடங்களை பெறுவதற்கான, அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்துவருவது, வரவேற்கத்தக்கது! -ஈ.எஸ். கதிர், தலைவர் மற்றும் நிறுவனர், கதிர் கல்வி நிறுவனங்கள், கோவை.